October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உள்நாட்டு மாற்று எரி பொருளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: நிதின் கட்கரி

புது தில்லி, அக்.13

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாற்று எரிபொருள் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக இறக்குமதிக்கு மாற்றான, செலவு குறைந்த, மாசற்ற மற்றும் உள் நாட்டு மாற்று எரி பொருளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தில்லியில் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் சார்பில், மாற்று எரிபொருள்- சாலை முன்னேற்றம் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், பயோ எத்தனால் மாற்று எரிபொருள் மிக பெரிய நன்மையை விளைவிக்கும் சுத்தமான எரிபொருள் என்றும் மிகவும் குறைந்த வாயு வெளியேற்றத்துடன் கூடிய பசுமை இல்ல எரிபொருள் என்றும் கூறினார்.

இதனை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் நேரடியாக கிடைக்கும் என்றும் இதன் மூலம் கிராம புற மற்றும் பின் தங்கிய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார். 2025ம் ஆண்டுக்குள் 20 சதவிகித பெட்ரோலுடன் பயோ எத்தனால் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும் என்று?ம் இதற்கு 10 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவைப்படும் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளினால் எத்தனால் அதிகமாக கிடைக்கும் மாநிலங்களில் இருந்து எத்தனால் குறைவாக கிடைக்கும் வடகிழக்கு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார். விமான போக்குவரத்திலும் பயோ எத்தனாலை நிலையான எரிபொருளாக பயன் படுத்த முடியும் என்று கூறிய அவர், 80 சதம் வரை வாயு வெளியேற்றம் தவிர்க்கப்பட்டு வழக்கமான விமான எரி பொருளுடன் 50 சதம் வரை கலக்க முடியும் என்றும் கூறினார்.

Spread the love