October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

உள்மாவட்ட அளவிலான நுண்ணீர் பாசன பயிற்சி

சிவகங்கை, அக்.8

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் புதுப்பட்டி வருவாய் கிராமம் சக்கந்தி ஊராட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் சிவகங்கை, வேளாண்மை இணை இயக்குநர் கி.வெங்கடேஸ்வரன, தலைமையேற்று திட்ட செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். சிவகங்கை, வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி, சிவகங்கை வட்டாரத்தில் செயல்படுத்தபடும் திட்டங்கள் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள் பற்றியும் பராமரிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் தண்ணீர் வசதி இல்லாத விவசாயிகள் நுண்ணீர் பாசனத்துடன் இணைந்து துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டதிலும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறினார். ஆழ்துணை கிணறு , டீசல் அல்லது மின் மோட்டார், தரை மட்ட நீர் தேக்க தொட்டி ஆகியவற்றிக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படுவதாக கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு ஆலோசகர் கண்ணன், பயிர் சாகுபடி முறைகள் பற்றி எடுத்து கூறினார். வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். கிருஷ்ணா, உழவியல்துறை நிபுணர் (ரிவில்ஸ் இரிகேசன்) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு நுண்ணீர் பாசனம் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி எடுத்துக் கூறினார். சிவகங்கை வேளாண்மை அலுவலர் தியாகராஜன், நன்றியுரை கூறினார். விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் எஸ்.உதயகுமார், மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜா மற்றும் ஆனந்தவள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love