மதுரை, மே 27
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (யுவுஆயு) திட்டம் 2022-23 ம் ஆண்டின் கீழ் கள்ளிக்குடி அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களான நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து 50 விவசாயிகளை இக்கண்டுணர்வு பயணம் சிறப்புற வேளாண்மை உதவி இயக்குநர் ச.உலகம்மாள், வழி அனுப்பி வைத்தார்கள். உள் மாவட்ட அளவிலான கண்டுணர்வு பயணமாக கப்பலூர் உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுபாட்டு காரணிகள் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஞானவேல், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா, ரைசோபியம், திரவ உயிர் உரங்கள் பற்றி மிக தெளிவாக எடுத்து கூறினார். தற்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கோடை உழவு செய்வதனால் ஏற்படும் நன்மையையும் பற்றியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச.கணேசராஜா, மிக தெளிவாக எடுத்து கூறினார். இப்பயிற்சிகான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் இராஜகோபால் செய்து இருந்தார்.
Spread the love