திருச்சி, ஏப்.4
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் 11 மாணவிகளான ஜோதிகா, காஞ்சனா, கனிகா, கவிப்ரியா, காவ்யா, காவ்ய ஸ்ரீ, லக்ஷ்மி பிரபா, கீர்த்தனா, ந.மதுமிதா, சு.மதுமிதா, மகாலட்சுமி ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். ஊரக வேளாண் பணி அனுபவமானது, வேளாண் மாணவர்களுக்கு கிராமங்களின் நிலையைப் பற்றி அறியவும், விவசாயிகளின் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை நல்குவதாகும்.
அதன் ஒரு பகுதியாக மருங்குளம் என்னும் கிராமத்தில், உழவன் செயலி பற்றி விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி அளித்தனர். உழவன் செயலி மூலம் வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர் காப்பீடு விவரங்கள் அறியலாம். டிராக்டர், பவர் டில்லர் மற்றும் நிலம் வலைக்குடில், பசுமை குடில் போன்றவைக்கு மானியம் பெற முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. வேளாண் இயந்திரங்களை குறைந்த விலைக்கு வாடகைக்கு பெறுவது, உரங்கள் மற்றும் விதைகளின் இருப்பு நிலை அறிவது, வானிலை முன் அறிவிப்பு, வேளாண் உதவி அதிகாரியை தொடர்பு கொள்வது உள்ளிட்ட பல வசதிகளளும் இருக்கின்றன. இச்செயலியின் பயனறிந்து இனி வரும் காலங்களில் பயன்படுத்துவோம் என்று விவசாயிகள் கூறினர்.
Spread the love