August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஊமத்தை

ஊமத்தை இதில் வெண் ஊமத்தை கரு ஊமத்தை மஞ்சள் நிற பூக்களை உடைய ஊமத்தை என உள்ளது. வெள்ளை நிற பூக்கள் உள்ள ஊமத்தையை பற்றி பார்ப்போம். செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ பயன் உடையவை. வாந்தி உண்டாக்குதல், இசிவு அகற்றுதல், துயர் நீக்குதல், மூச்சை உண்டாகுதல் குணம் உடையவை. இலையை உலர்த்தி முடித்து ஐம்பது முதல் 150 மில்லி கிராம் வரை அளவாக உள்ளுக்கு கொடுக்க இரைப்பிருமல் நீங்கும். இலையை வதைக்கி ஒத்தடம் கொடுப்பதால் கீல்வாதம் கட்டிகளால் ஏற்படும் வலி பால் கட்டிக் கொள்வதால் உண்டாகும் வலி தனியும். இலையுடன் சமனளவு அரிசி மாவு சேர்த்து அரைத்து தனலில் களிபதமாய் வேக வைத்து இளம் சூட்டில் பற்று போட மூட்டுகளில் தோன்றும் வீக்கம் கட்டிகளால் ஏற்படும் வலி, வெளிமூலம் ஆகியவை தீரும். நரம்பு சிலந்திக்கும் போடலாம். இலைச் சாறு இரண்டு அல்லது மூன்று துளியை வெல்லத்தில் கொடுத்து பகலில் மோர் சோறும் இரவில் பால் சோறும் மூன்று நாட்களுக்கு கொடுத்து வர வெறிநாய்க்கடி நஞ்சு நீங்கும். உப்பு, புளி ஆகியவற்றை முற்றிலும் நீக்க வேண்டும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love