May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஊரக திறனாய்வு பயிற்சியில் வேளாண் மாணவா்கள்

தஞ்சாவூர், மார்ச் 14

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவா்கள் சீ.சங்கர், பெ.வினித் பிரசன்னா, மா.அப்துல் கலாம், கு.அபிஷேக், அ.அரவிந்த், ப.பாலாஜி, ரா. பாலமுருகன் தங்களின் ஊரக பணி அனுபவத்தின் போது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிக்கோயில் கிராமத்தில் பங்கேற்பு ஊரக திறனாய்வில், விவசாயிகள், சுய உதவிக் குழுக்களிடம் கலந்துரையாடி அவ்வூர் மக்களையே பயன்படுத்தி சமூக வரைபடம், வள வரைபடம், சிக்கல் மரம், காலக்கோடு பருவகால அட்டவனை, தின வேலை அட்டவனை, நகர்வு வரைபடம், வெண்படம், வரவு செலவு அட்டவனை வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினர். சிக்கல் மரம் மூலம் விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்கள் அவற்றை எவ்வாறு சரி செய்யலாம் என்பதனையும் எடுத்துரைத்தனர்.

Spread the love