திருச்சி, ஏப்.5
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி நாளந்தா வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் துறையூர் வட்டம், செங்காட்டுப்பட்டி கிராமத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்திற்காக தங்கி விவசாயிகளை சந்தித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, துறையூர் வட்டாரத்தில் உள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தில் செயல் விளக்க கிராம விவசாயிகள் பயிற்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை அலுவலர்கள் விதை நேர்த்தி மற்றும் மண் பரிசோதனை பற்றி விளக்கம் அளித்தனர். இக்கூட்டத்தில் மாணவர்கள் R.நரேந்திரன், R.செந்தில் குமார், R.நவீன் பாபு, S.கோகுலகிருஷ்ணன், K.ஆறுமுகம், M.பரத், D.நிதிஷ், S. ஶ்ரீதர், S.செல்வகுமார், S.சிவசங்கர் ஆகியோர் பங்கு பெற்று மண் மாதிரி சேகரிப்பு முறைகளை பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தனர்.
Spread the love