August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஊரடங்கால் தமிழகத்தில் 75 சதம் லாரிகள் நிறுத்தம்

நாமக்கல், மே 18

தமிழகம் முழுவதும் ஊரடங்கால் 75 சத லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு சரக்கு வாகனங்களை தடையின்றி இயக்கலாம் என அறிவித்து இருந்தாலும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் போதிய லோடு கிடைப்பது இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 4டி லட்சம் லாரிகளில் 25 சத லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

மீதமுள்ள 75 சத லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 8 நாட்களில் சுமார் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் 7 லட்சம் டிரைவர், கிளீனர் உள்பட மொத்தம் 14 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் லாரி தொழிலை பாதுகாக்க நலவாரியம் அமைக்க வேண்டும். லாரி உரிமையாளர்களை பாதுகாக்க 6 மாத காலத்திற்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைக்க வேண்டும். இதுபோன்ற சலுகைகளை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கினால் மட்டுமே இந்த தொழிலை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love