May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எக்ஸ்பிரஸ் ஹோம் டெலிவரி சேவை: பிக் பஜார் அறிமுகம்

மும்பை, மே 4

ரீடெய்ல் விற்பனை நிறுவனமான பிக் பஜார் நிறுவனம், ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டிப்போடும் வகையில் ஆர்டர் செய்த பொருட்களை 2 மணிநேரத்தில் டெலிவரி செய்யும் எக்ஸ்பிரஸ் ஹோம் டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்புதிய சேவையின் வாயிலாக அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஆன்லைன் மூலம் பெறும் வர்த்தகத்தின் அளவை இரட்டிப்பு வளர்ச்சி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும், செய்தியாவது: கடந்த மாதம் பிக் பஜார் தனது அனைத்து ரீடெய்ல் கடைகளிலும் ஹோம் டெலிவரி சேவையை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கிளிக் டூ ஹோம் என்ற ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா-வை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவின் அடிப்படையே 2 மணிநேர டெலிவரி சேவையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது தான் என பிக் பஜார் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் விரிந்திருக்கும் பிக் பஜார் கிளைகள் சில வருடங்களுக்கு முன்பு வரை இந்திய ரீடெய்ல் சந்தையின் முன்னணி வர்த்தக நிறுவனமாக இருந்த நிலையில், வர்த்தகப் போட்டி, இந்நிறுவனத்தின் கடன் சுமை ஆகியவற்றின் காரணமாக வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் தொடர்ந்து இழந்து வந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் வர்த்தகத்தை நடத்தி வரும் பியூச்சர் குரூப் தனது வர்த்தகத்தை மேம்படுத்த முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. பல பிக் பஜார் கடைகளில் 40 சதவீத வர்த்தகம் ஆன்லைன் வாயிலாகக் கிடைக்கும் காரணத்தால் இதை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப் பியூச்சர் குரூப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் 10-15 சத வர்த்தகம் ஆன்லைன் வாயிலாகக் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளது பியூச்சர் குரூப். மேலும் சுமார் 150 நகரங்களில் இந்த 2 மணிநேர டெலிவரி பயன்பாட்டில் உள்ளது.

Spread the love