August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்கு பிரத்யேக இணையப் பக்கம்: மஹிந்திரா அறிமுகம்

புது தில்லி, ஏப்.27

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவிக்கு பிரத்யேக இணையப் பக்கம் திறக்கப்பட்டுள்ளது என மஹிந்திரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த புத்தம் புதிய எஸ்யூவியை வாங்க விருப்பம் உள்¼ளார், இந்த பக்கத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி தயாரிப்பு பொறியியல் திறனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்தச் செல்ல இருக்கிறது. இதற்காக, மிகச் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புத்தம் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது.

பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது. W601 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த புதிய மாடலானது எக்ஸ்யூவி700 என்ற பெயரில் சந்தைக்கு வர இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவியை வாங்க விரும்புவோர் இந்த இணையப் பக்கத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, பண்டிகை காலத்திற்கு புதிய கார் வாங்க திட்டமிடுவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்நிலையில், புதிய எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட உடன் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், இதனை 5 சீட்டர் மாடலாக கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Spread the love