தேனி, ஏப்.6
திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த இறுதியாண்டு மாணவிகள் தங்களின் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தின் போது தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், எண்டப்புளி பகுதியில் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடத்தினர். தோட்டக்கலை மாணவிகள் சங்கவி, சசிரா, சைனி, சிந்துஜா, சௌமியா, ஸ்ரீலட்சுமி கிராமத்தின் பகுதிகளை அறிய சமூக வரைபடம், கிராமத்தின் பிரச்சினைகளையும் அதன் காரணங்களையும் ஆராய சமூக இடர்பாடுகள் மரம், பருவ காலங்களை அறிய பருவகால நாள்காட்டி, தினசரி வேலைகளை தெரிந்து கொள்ள தினசரி கடிகாரம், நகர்வு வரைபடம், கிராமத்தின் மாற்றங்களை அறிய காலவரிசை முதலிய கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு முறைகளை அப்பகுதி மக்களுடன் இணைந்து செய்தனர். இந்த பங்கேற்பு மதிப்பீடு மூலம் கிராமத்தின் பிரச்சினைகளையும் அதை சரி செய்யும் வழிகளையும் அக்கிராம மக்களுடன் இணைந்து தெரிந்து கொண்டனர்.
Spread the love