எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், சூரிய காந்தி, ஆமணக்கு போன்ற பயிர்களுக்கு உள்நாட்டிலே தேவை இருந்தாலும்கூட கொரானா பாதிப்பிற்கு பின், உக்ரைன்– ரஷ்யா போர் எற்பட்டதன் விளைவாக சமையல் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டாலும் விலை உயர்வை தடுக்க முடியவில்லை. இதை எல்லாமே நாம் நன்றாக உணர்ந்த பின்னர் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியில் தயக்கம் காட்டுவதாக ஏன்?.
சமையல் எண்ணெய் முற்றிலுமாக இறக்குமதி செய்வதை தடுக்க நாம் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு, எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் எண்ணெய் வித்து அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்களில், பல்வேறு மானியங்களை சாகுபடியாளர்களுக்கு, உயிர் உரங்களுக்கான மானியம், நுண்ணூட்ட உரத்திற்கு, எண்ணெய் தன்மையை அதிகரிக்க ஜிப்சம் இட பின்னேற்பு மானியம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் வாங்கிட தெளிப்பான், சுழல் கலப்பை வாங்கிட மானியம் வழங்கப்படுகிறது. தரமான விதைகள் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு எண்ணெய் வித்து பயிரில் மகசூல் அதிகரிக்க உள்ள தொழில்நுட்பங்களை கடைபிடித்து எண்ணெய வித்து உற்பத்தியில் தன்னிறைவு அடைவோம். என்ன வளம் (எண்ணெய் வளம்) இல்லை இந்த திரு நாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடல் வரிக்கேற்ப சாகுபடி பரப்பை அதிகரிக்க நாமும் முயற்சி செய்வோம்.