சென்னை, மே 8
தனது கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.1 அப்டேட் சாம்சங் நிறுவனம் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் வியட்நாமில் உள்ள கேலக்ஸி எம்11 பயனர்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருக்கும் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.
சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மின், நோட்டிபிகேன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்சன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட்.
இந்த ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்களாவது: சாம்சங் கேலக்ஸி எம் 11 6.4 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் கிடைக்கிறது. அதோடு இடது மூலையில் பஞ்ச் ஹோல் வசதியும் உள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம் உள்ளிட்ட சில நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
இந்த தொலைபேசி 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி வரை ரேம்கொண்டது. சேமிப்பை மைக்ரோ எஸ்டி வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க முடியும்.
கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 துளை, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் கேமரா ஆகிய வசதி உள்ளது. குறிப்பாக பின்புற கேமராக்கள் 1080p வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா வசதியும் உள்ளது. இது திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஒரு துளை-பஞ்சில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி வரை ஆதரிக்கிறது, இதில் 15 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவும் உள்ளது. 4 ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் ஆகியவை இதில் உள்ளது.