June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எலுமிச்சையில் கான்கர் நோய் கட்டுப்பாடு

மதுரை, மார்ச் 29

மதுரை கிழக்கு பகுதியில் உள்ள எலுமிச்சை மரங்களில் கான்கர் நோய் பாதித்துள்ளதால் அவற்றை சந்தைப்படுத்த முடிவில்லையென்று விவசாயிகள் கூறுகின்றனர்.

நோயின் அறிகுறிகள் :
1.சொறி நோயினை ஏற்படுத்து ம்பேக்டீரியா இலைத்துளைகள் (Stomata) மூலமாகவோ பூச்சி மற்றும் காற்றில் அசையும் முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ ஊண் ஊட்டும் தாவரத்திற்குள் (Host) நுழைகிறது.

2.இவை இலையின் அடிப்பகுதியில் நிலையாகின்றன. இவ்விடத்தில் சொறி போன்ற வளர்ச்சி ஏற்பட்டு பேக்டீரியா அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

3.இந்நோய் 20 முதல் 350 சென்டி கிரேடு வெப்ப அளவில் நல்ல மழையுள்ள காலங்களில் அதிமாகக் காணப்படுகிறது. நோய் உண்டாவதற்கு இலைகளில் குறைந்தது 20 நிமிடங்களுக்கு ஈரம் இருக்க வேண்டும்.

4.நோயுற்ற இலையில் பேக்டீரியா 6 மாத காலத்திற்கு அழியாமல் இருக்கின்றது. பேக்டீரியா நோயுற்ற சிறுக் குச்சிகளில் அதிக நாட்கள் அழியாமல் தங்கியிருந்து நோய் உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றது.

கட்டுப்படுத்தும் முறை :

இச்சொறி நோயைக் கட்டுப்படுத்த போர்டோபேஸ்ட் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் (Streptomycin Sulphate) 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்களுக்குக்கொரு முறை தெளிக்க வேண்டும். தனித்தனியாக 1 கிலோ காப்பர்சல்/பேட்டை 25 லிட்டர் தண்ணீரிலும், 1 கிலோ நீரிய சுண்ணாம்பை 25 லிட்டர் தண்ணீரிலும் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் காப்பர்சல்/பேட்டை மெதுவாக நீரிய சுண்ணாம்பில் ஊற்றி மரக்குச்சியை பயன்படுத்தி கலக்க வேண்டுமென்று கள்ளந்திரியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவி பெ.ஜனனி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமாக செய்து காட்டினார்.

Spread the love