January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எலுமிச்சை கிலோ ரூ.110க்கு விற்பனை

இராமநாதபுரம், ஏப்.23

இராமநாதபுரம் பகுதியில் எலுமிச்சை விலை உயர்ந்து கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது. ஆனாலும் எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு

எலுமிச்சை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை துவங்கியதால் எலுமிச்சை தேவை அதிகரித்துள்ளது. இதனால் கிலோ கணக்கில் வியாபாரிகள் வாங்கி குவித்து வைத்துள்ளனர்.

ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு எலுமிச்சை ரூ.3 முதல் ரூ.6 வரை விற்பனையாகிறது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கால் சந்தைக்கு சில நாட்களாக சில்லரை வியாபாரிகள் மற்றும் மக்கள் வருகை குறைந்துள்ளது. கோயில் விழாக்களும் நடைபெறவில்லை. இதனால்

எதிர்பார்த்த விற்பனை இல்லாமல் வியாபாரிகள் எலுமிச்சை பழங்கள் அப்படியே உள்ளன என மொத்த வியாபாரிகள் கூறினர்.

Spread the love