August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எலுமிச்சை வரத்து சரிவு, தர்பூசணி வரத்து அதிகரிப்பு

சென்னை, ஏப்.21

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூர், நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிக அளவில் வருகின்றன. மேலும் தமிழகத்தின் சங்கரன்கோவில், தென்காசி

ஆகிய ஊர்களில் இருந்து எலுமிச்சை பழங்கள் வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினமும் 10 லாரிகளில் எலுமிச்சை வருவது வழக்கம். தற்போது விளைச்சல் பாதிப்பு காரணமாக தினமும் 5 லாரிகளில் மட்டுமே எலுமிச்சை

வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் முதல் ரக எலுமிச்சை 1 கிலோ ரூ.80க்கும், 2வது ரகம் 1 கிலோ

ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை மார்க்கெட்டில் எலுமிச்சை முதல் ரகம் கிலோ ரூ.100க்கும், 2-வது ரகம் கிலோ ரூ.70க்கும் விற்பனையாகிறது. சில தினங்களுக்கு முன்பு சில்லரை மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.120 வரை

விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.100 ஆக குறைந்துள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்கு பிறகு எலுமிச்சை வரத்து அதிகரிக்கும். அதன்பிறகு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோடைகாலம் என்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம்,

காரனோடை, செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து தர்பூசணி கொண்டுவரப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் 30

லாரிகளில் தர்பூசணி வந்தது. தற்போது தினமும் 40 லாரிகளில் தர்பூசணி வருகிறது.

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் 1 கிலோ தர்பூசணி ரூ.10க்கும், சில்லரை மார்க்கெட்டில் 1 கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது : கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 40 லாரிகளில் தர்பூசணி கொண்டுவரப்படுகிறது. தற்போது

கரோனா 2வது அலை பரவி வருவதால் தர்பூசணி வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக தினமும் 5 முதல் 6 லாரி தர்பூசணி விற்பனையாகாமல் தேக்கம்

அடைகிறது. எனவே வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது விளைச்சல் ஓரளவு இருந்தாலும் கரோனா மீண்டும் பரவி வருவதால் தர்பூசணி விளைவித்த வியாபாரிகளும்

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

Spread the love