May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எலுமிச்சை விலை உயர்வு

சென்னை, ஏப்.30

தேவை அதிகரிப்பால், எலுமிச்சை பழங்களின் விலை உயர்ந்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், எலுமிச்சை பழங்கள் சாகுபடி நடக்கிறது. உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், அவை விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது. கோடை காலம் துவங்கியுள்ளதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப, எலுமிச்சை கலந்த பானங்களை பலரும் அருந்த துவங்கி உள்ளனர்.
மேலும், கரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு, தோலுடன் கூடிய எலுமிச்சை, இஞ்சி கலந்த சுடுநீர் பருக வேண்டும் என, சித்த மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். இதனால், எலுமிச்சை தேவை அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும், அவற்றின் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது.

எனவே, எலுமிச்சை பழங்களின் விலை உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில், ஒரு கிலோ எலுமிச்சை, ரூ.80 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை மார்க்கெட்டில் ஒரு கிலோ, ரூ.130 வரையும், ஒரு எலுமிச்சை ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love