January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எல் & டி நிறுவனத்தின் லாபம் 11.3 சதம் அதிகரிப்பு

மும்பை, மே 15

முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமானத் துறை நிறுவனமாகத் திகழும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) நான்காவது காலாண்டில் ரூ.3,820 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எல் & டி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ஈட்டிய வருமானம் ரூ.49,116.16 கோடியாக இருந்தது. இது, 2019-20ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.44,905.76 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என தெரிவித்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபம் ரூ.3,430.10 கோடியிலிருந்து 11.3 சதம் அதிகரித்து ரூ.3,820.16 கோடியை எட்டியதாக எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love