August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எள் அறுவடை ஆரம்பம் கரோனா முடக்கத்தால் விவசாயிகள் கவலை

விழுப்புரம், மே 13

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாசி பட்டத்தில் மானாவாரி மற்றும் இறைவை பயிராக பயிரிடப்பட்ட எள் அறுவடைக்கு வந்துள்ளது. இவ்வாண்டு, தை, மாசி மாதங்களில் கிடைத்த மழையின் காரணமாக மேட்டு நிலங்களில் டிஎம்வி 4 என்கிற எள் இரகம் அதிக பரப்பளவில் பயிரடப்பட்டது. குறைவான நீர் தேவை மற்றும் குறைந்த சாகுபடி செலவுகள் காரணமாக விவசாயிகள் இப்பயிரை பயிரிட்டனர். மேலும், 85-90 நாட்கள் வயதுடைய இப்பயிரானது குறுகிய காலத்தில் நல்ல இலாபம் தரவல்லது. ஆனால், இவ்வாண்டு கரோனா பொது முடக்கத்தால் சந்தைக்கு வியாபாரிகளின் வரவு குறைந்ததாலும் அதிக பரப்பளவில் பயிரடப்பட்ட காரணத்தாலும் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை சென்றால் இலாபம். ஆனால், தற்போது கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

– இரா.வெங்கடேஷ் மற்றும் இரா.ஜெயசங்கரமூர்த்தி

Spread the love