August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எள் அறுவடை துவக்கம்: விளைச்சல் சரிவால் விவசாயிகள் கவலை

திருப்பூர், மே 10

நிலையான விலை இருக்கும் சூழலில் மானாவாரி எள் சாகுபடியில், விளைச்சல் குறைந்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், மானாவாரியாக, சோளம், மக்காச்சோளம், எள் உட்பட பல்வேறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால், இச்சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. நல்லெண்ணெய் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதால், எள்ளுக்கு, அதிக தேவை உள்ளது. ஆனால், இறவைப்பாசனத்தில், எள் குறைவாகவே சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடியில், 90 முதல் 110 நாட்களில், அறுவடை செய்து, எள்ளை பிரித்தெடுக்கின்றனர். இதனால், ஆண்டு முழுவதும், எள்ளுக்கு தட்டுப்பாடு உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எள் சாகுபடியில், இடுபொருள் உட்பட சாகுபடி செலவு குறைவாகவே பிடிக்கிறது. சராசரியாக, தரத்தின் அடிப்படையில், கிலோவுக்கு, ரூ.85 முதல் ரூ.120 வரை விலை கிடைக்கிறது. வழக்கமாக, ஏக்கருக்கு, 80 கிலோ கொண்ட, 5 மூட்டை, வரை விளைச்சல் கிடைக்கும். நடப்பாண்டு, விளைச்சல், குறைவாகவே கிடைத்துள்ளது என்றனர்.

Spread the love