October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்எஸ்சி எழுதுவோருக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்பு: ஆட்சியர்

கடலூர், அக்.8

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர்இ பெண்கள் படைப்பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3261 பல்வேறு பணிக்காலியிடங்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் வாயிலாக 25.10.2021 வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறித்த தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 09.10.2021 முதல் வாரம்தோறும் சனி கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Spread the love