October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்.புதூர் வட்டாரத்தில் உழவர் நண்பன் ஆய்வு கூட்டம்

சிவகங்கை, அக்.9

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் (SSEPERS) அட்மா திட்டத்தின் கீழ் உழவர் நண்பன் ஆய்வு கூட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் பேசுகையில், உழவர் நண்பர்களாக பணியாற்றி வரும் விவசாயிகளுக்கு உழவர் நண்பர்களின் பணிகள் பற்றியும் அதன் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ஞானசேகர், உழவர் நண்பர்களின் பணிகள் பற்றி விரிவாக எடுத்து கூறி தங்களுக்கு ஒதுக்கபட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாய சம்மந்தபட்ட பணிகளை வேளாண் அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு எடுத்து கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு உழவர் நண்பன் பற்றி விரிவாக எடுத்து கூறி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் கூறினார்மற்றும் தங்களுக்கு ஒதுக்கபட்ட வருவாய் கிராமங்களுக்கு தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கும் பணியினை விரிவாக எடுத்து கூறினார்.

Spread the love