சிவகங்கை, ஜூன் 10
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செட்டிகுறிச்சி, வலசைபட்டி மற்றும் முசுண்டபட்டி வருவாய் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 10.06.2022 அன்று நடத்தபட்டது. முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டார்கள். செட்டிகுறிச்சி வருவாய் கிராமத்தில் மாயவேல், தோட்டகலைத்துறை உதவி அலுவலர், இளங்கவி, வேளாண்மை துறை உதவி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பிரியங்கா, வேளாண்மை உதவி அலுவலர், அழகர், வேளாண்மை உதவி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு திட்டங்களை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார்கள்.
வலசைபட்டி வருவாய் கிராத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெ.ஸ்ரீரங்கசெல்வி மற்றும் அ.கார்த்திக்ராஜா, வேளாண்மை உதவி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு திட்டங்களை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள். கண்மாய்களில் உள்ள மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் தி;ட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார்கள்.
முசுண்டபட்டி வருவாய் கிராத்தில் வேளாண்மை அலுவலர் ப.கார்த்திகா, கௌசல்யா, தோட்டகலை அலுவலர், பாலமுருகன், உதவி விதை அலுவலர், மனோஜ் தோட்டகலைத்துறை உதவி அலுவர், உதவி தொழில்நுட்ப மேலாளர் க.கோபால கிருஷ்ணன் மற்றும் மாரீஸ்வரன், வேளாண்மை உதவி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு திட்டங்களை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள். மீன் வளத்துறை, உதவி ஆய்வாளர் சோபியா, ஆகியோர் கலந்து கொண்டு தி;ட்டங்கள் பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள்.