August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு தென்னை நடவு முறை பற்றிய தொழில்நுட்பம்

சிவகங்கை, ஆக. 2

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, தென்னை நடவு முறை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விரிவாக தொழில்நுட்பம் பற்றி விளக்கமளித்தார்.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிக்கும் பயிராக தென்னை விளங்குகிறது. தேசிய அளவில் தமிழ்நாடு தென்னை உற்பத்தியில் முதலிடமும், பரப்பளிவில் 2 வது இடத்திலும் உள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்கள். தென்னை கற்பகவிருட்சம் என்று அழைக்கபடுகிறது. விவசாயிகளுக்க ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய பல்லாண்டு வகை பயிராகும்.

தென்னை பாகங்கள் அனைத்தும் ஏதேனும் 1 வகையில் பயன்படுகிறது. மேலும் உணவு தேவையை பூர்த்தி செய்ய ஊட்டசத்தாகவும் மட்டுமல்லாமல் சிறந்த வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஒரு பன்முக தன்மை கொண்ட பயிராகவும் தென்னை விளங்குகிறது.

நிலத் தேர்வு
செம்மண், வண்டல் மண் ஆகிய மண் வகைகள் உகந்தவை. ஆழமான (அதாவது 1.5 மீ ஆழத்திற்கு குறைவின்றி) வடிகால் வசதியுடன் கூடிய கடின மண்ணினை / மண்ணுள்ள பகுதியை தேர்வு செய்ய வேண்டும். வடிகால் வசதியற்ற மண்ணினை தேர்வு செய்ய கூடாது. மேற்புற மண்ணுடன் கூடிய கடின பாறை நீர் தேங்கும் மற்றும் கடின களிமண் வகைகளை தவிர்ப்பது நல்லது. தென்னை சாகுபடிக்கு குறைந்தபட்ச ஆழமான 1.2 மீ மற்றும் ஓரளவு நீரை தக்க வைத்டத கொள்ளும் மண் வகை உகந்தது. மேலும் நிரத்தின் நீரை தக்க வைக்கும் திறன் மணல் மற்றும் களிமணணை அடுத்தடுத்த அடுக்குகளாக குவிப்பதனால் நீர் தேக்கம் அதிகரித்து தென்னை மரத்திற்கு வளர்ச்சியை துண்டுகிறது.

இளங்கன்றை பாதுகாக்கும் முறை

நட்ட முதல் 2 வருடங்களுக்கு உயர் கோடை மாதங்களில் 4 நாட்களுக்கு கன்றுக்கு 45 லிட்டர் என்ற வீதத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். நாற்று நடும் முறையில் நட்ட கண்றுகளுக்க போதுமான அளவு நிழல் அளித்தல் அவசியம். கன்று நட்டபின் காற்றின் வெகம் அதிகமாக இருந்தால் 1 குச்சிறை ஊன்றி அதனை சேர்த்து கட்ட வேண்டும் இதனால் வேகமான காற்றினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம். நீர் தேங்க கூடிய இடங்களில் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டியது அவசியம். இலைசருகு அதிகமுள்ள பகுதிகளில் கன்றுகளை நடும்போது செம்மண்ணை இடுதல் வேண்டும். குழிகளிலிருந்து களைகளை அவ்வப்கோது நீக்கிவிட வேண்டும். மேலும் கழுத்து பகுதியில் மழையினால் அடித்து வரப்பட்ட மண்ணின் தொந்தரவு அதிகமாக இருக்கும் அவ்வப்போது அதனை நீக்கிவிட வேண்டும். எரு இடுவதற்கு முன்பு ஓவ்வொரு ஆண்டும் குழிகளை சீராக நிரப்பிவர வேண்டும். கன்றுகள் வளர வளர குழிகளை சீராக நிரப்பி விட வேண்டும்.

Spread the love