June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு முறைகள் குறித்த விளக்கம்

சிவகங்கை, ஜூன் 14

சிப்பிக் காளான்
கடலில் கிடைக்கும் முத்துச் சிப்பியின் வடிவத்தை இக்காளான் பெற்றுள்ளதால் சிப்பிக்காளான் எனப்படுகிறது. பல்வேறு நிறங்களில் இவ்வகையைச் சார்ந்த காளான்கள் காடுகளில் வளர்கின்றன. தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பவும் இதன் நிறம் மாறுபடும். சதைப்பிடிப்பு மிக்க சிப்பிக் காளானுக்கு ஒரு சிறிய தண்டுப் பகுதியும் உண்டு. சில வகைச் சிப்பிக்காளான்களில் தண்டுப் பகுதி இல்லாமலும் இருக்கும். சிப்பிக் காளானின் அடிப்பகுதியில் வரி வடிவம் கொண்ட செதில் போன்ற அமைப்புகள் காணப்படும்.

சிப்பிக்காளான் இரகங்கள்

இரகம் இனம் நிறம்
கோ. 1 பி.சிட்ரினோபை-யேட்டஸ் தூய வெண்மை
ஏ.பி.கே. 1 பி.இயோஸ் இளஞ்சிவப்பு
எம்.டி.யு. 1 பி..ஜமோர் வெண்மை
எம்.டி.யு. 2 பி.பிளாபெல்லேட்டஸ் வெண்மை
ஊட்டி 1 புp.ஆஸ்ட்ரியேட்டஸ் சாம்பல் கலந்த வெண்மை
எம். 2 பி. சஜோர் கஜூ சாம்பல்
பி.எப் பி.ப்ளேரிடா வெண்மை

சிப்பிக் காளான் வளர்க்க ஏற்ற பண்ணைக் கழிவுகள்
பொதுவாக சிப்பிக்காளான் வளர்க்க ஏற்ற பண்ணைக் கழிவுகளை மூன்று வகைப்படுத்தலாம்.
Ø மிகச் சிறந்தவை: நெல் மற்றும் கோதுமை வைக்கோல் (விளைதிறன் 80 – 150 சதம்)
Ø சிறந்தவை: கரும்புச் சக்கை, மக்காச்சோளக் கதிர் சக்கை, கழிவுப் பஞ்சு போன்றவை (விளைதிறன் 50-80 சதம்)
Ø ஒரளவுக்குச் சிறந்தவை: சோளத் தட்டை, பருத்திமார் போன்றவை (விளைதிறன் 40 – 50 சதம்)

சிப்பிக் காளான் குடிலின் அமைப்பும் அளவும்
சிறிய அளவில் சாகுபடி செய்ய தென்னங்கீற்று வேய்ந்த குடிலைப் பயன்படுத்தலாம். குடிலின் அளவு தினசரி நாம் உற்பத்தி செய்யும் காளான் அளவைப் பொறுத்து அமைய வேண்டும். நாளொன்றுக்குச் சுமார் 20 கிலோ காளான் உற்பத்தி செய்வதாக இருந்தால் ஏறத்தாழ 1000 ச.அடி. அளவுக்குக் குடில் அமைக்க வேண்டும். தவிர வைக்கோல் போர் அமைத்தல், வைக்கோலை வெட்டி ஊறவைத்தபின் வேகவைத்தல் போன்றவற்றுக்கும் இடவசதி தேவைப்படும். காளான் குடிலின் நீள அகலத்தை தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். குடிலை கிழக்கு மேற்கில் அமைப்பதால் சீரான வெப்ப நிலையை உருவாக்கலாம். குடிலின் உயரம் 10-12 அடிக்கு அதிகமாக இருக்கக் கூடாது. தேவையைப் பொறுத்து பொய்கூரை (தரைமட்டத்திலிருந்து சுமார் 9 அடி உயரத்தில்) அமைக்கலாம்.

இக்குடில்களில் 20-280 செ. வெப்பநிலை இருக்கலாம். தவிர காற்றின் ஈரப்பதம் 85 சதவிகிதத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். அதிகப்படியான வெளிச்சம் தேவையில்லை. பொதுவாக காளான் தோன்றும் அறையில் 600-800 லக்ஸ் அளவுக்கு வெளிச்சம் இருக்க வேண்டும். காளான் குடிலில் நல்ல காற்றோட்டம் அவசியம். காற்றோட்டமில்லாமல் அறையை அடைத்து வைத்து விட்டால் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி, காளானின் இயற்கையான வளர்ச்;சி பெரிதும் பாதிக்கப்படும். வசதிவாய்ப்பிற்கேற்ப தட்பவெப்பநிலை, வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தைச் சரியான அளவில் பராமரிக்கத் தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம்.

அறையின் சன்னல்களுக்கு 35 சஅ மெஷ் அளவுள்ள நைலான் வலைகளைப் பொருத்தி, காளான் ஈ போன்ற தீமை பயக்கும் பு+ச்சிகள் புகாவண்;ணம் தடுக்கலாம். குடிலின் உட்புறம் தரையில் அரை அடி உயரத்திற்கு மணல் பரப்பி ஈரப்படுத்தியும், சுற்றுச்சுவர்களையொட்டி சுத்தமான சாக்குப் படுதாக்களைத் தொங்கவிட்டு அடிக்கடி தண்;ணீரால் நனைத்தும் (நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை) தேவையான சூழ்நிலையை உருவாக்கலாம்.

ஓலை வேய்ந்த குடிசைகள் இரண்டு ஆண்டுகளில் வீணாகிவிடும். எனவே சிப்பிக் காளான் வளர்க்க ஓலை வேய்ந்த குடிசைகள் தான் அமைக்க வேண்டுமென்பதில்லை. அவரவர் முதலீட்டுக்க ஏற்றாற்போல் நவீன வளர்ப்பறைகளை உருவாக்கிக்கொள்ளலாம். காளான் உற்பத்தியை 5 கிலோவிற்கு மேல் அதிகரிக்க விரும்பும்போது, காளான் வளர்ப்பறைகளை மிக நீளமாக அமைத்துப் பராமரிப்பதைவிட தடுக்கப்பட்ட சிறிய அறைகளாக அமைத்துப் பராமரிப்பது நலம்.

காளான் படுக்கைகள் தயாரித்தல்
சிப்பிக்காளான் வளர்க்க வைக்கோலைப் பயன்படுத்திக் காளான் விதையுடன் பாலித்தீன் பைகளில் இட்டு உருளைப் படுக்கைகள் தயாரிக்க வேண்டும்.

கொதி நீரில் பதப்படுத்துதல்
நன்கு உலர்ந்த வைக்கோலை 5 செ.மீ. அளவுள்ள துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் 4 – 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊற வைத்த வைக்கோல் துண்டுகளைச் சுமார் 1 மணி நேரம் 800 செ.மீ. வெப்ப நிலையில் தண்ணீரில் அமிழ்ந்திருக்குமாறு வேக வைக்க வேண்டும்.

நீராவியில் பதப்படுத்துதல்
ஊற வைத்த வைக்கோல் துண்டுகளை, அழுத்த வெப்பமூட்டி போன்ற வடிவமைக்கப்பட்ட கொதிகலன்களில் ஏறத்தாழ 15 பவுண்ட்ஸ் ஃ சதுர இன்ச்; நீராவி அழுத்தத்தில் சுமார் 45 நிமிடங்கள் பதப்படுத்தலாம்.

காளான் வித்திடுதல்
பதப்படுத்திய வைக்கோல் துண்டுகளை காற்றோட்டமுள்ள ஒரு அறையில் சுத்தமான சாக்குப்படுதா ஒன்றின்மேல் பரப்பி,ஈரப்பதம் 65 – 70 சதவிகிதம் இருக்குமாறு உலர்த்த வேண்டும். ஒரு பிடி வைக்கோல் துண்டுகளைக் கையிலெடுத்து இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் கொட்டக் கூடாது. அதே சமயம் வைக்கோல் ஈரமாகவும் இருக்க வேண்டும். பின் சுமார் 60×30 செ.மீ. அல்லது 75×45 செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் அடுக்கு முறையில் வித்திட்டு உருளைப் படுக்கைகள் தயாரிக்க வேண்டும். ஒரு காளான் வித்துப் புட்டியைப் பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று படுக்கைகள் வரை தயாரிக்கலாம். முதலில் பாலித்தீன் பையின் நடுவில் பென்சில் நுழையும் அளவுக்குத் துளையிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு பையின் அடிப்பகுதியை நூலால் கட்டி பையைத் திறந்து பதப்படுத்திய வைக்கோல் துண்டுகளைச் சுமார் 5 செ.மீ. உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அதன் மேற்பரப்பு முழுவதும் ஏறத்தாழ 25 கிராம் காளான் வித்துக்களைத தூவ வேண்டும். மீண்டும் 10 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை இரண்டாவது அடுக்காக நிரப்பி, மேற்பகுதியில் 25 கிராம் வித்துக்களைத் தூவ வேண்டும். இதே போல் மூன்றாவது மற்றும் நான்காவது அடுக்குகளைத் தயார் செய்ய வேண்டும். முடிவாக 5 செ.மீ. உயரத்திற்கு ஐந்தாவது அடுக்காக வைக்கோல் துண்டுகளைப் பரப்பியபின் பையின் மேற்பகுதியை ஒன்றாகச் சேர்த்து கட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் வைக்கோல் நிரப்பும் போது பையினை நன்றாகக் குலுக்கிவிட்டு ஓரளவுக்கு இறுக்கமாகப் படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும்.

காளான் படுக்கைகளைப் பராமரித்தல்
தயாரித்த உருளைப் படுக்கைகளை காளான் தோன்றும் அறையில் பல அடுக்குகளாக அடுக்கி வைக்க வேண்டும். பூசண இழைகள் படுக்கை முழுமையாகப் பரவச் சுமார் 15 முதல் 20 நாட்களாகும். படுக்கைகளை உறிகளிலும் தொங்க விடலாம். இம்முறையைப் பின்பற்றவதால் அடுக்குப் பலகை அல்லது அலமாரி செய்யும் செலவு மிச்சமாகிறது. காளான் பூசணம் முழுமையாகப் பரவிய பிறகு பையை மெதுவாகக் கிழித்து விட்டு, படுக்கைகளின் மேற்பரப்பு ஈரமாகும்படி தினமும் ஓரிரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். அறையைக் குளிர்ச்சியாகவும் நல்ல ஈரப்பதத்துடனும் வைத்திருக்க வேண்டும், மூன்று நாட்களில் காளான் மொட்டுக்கள் படுக்கையின் மேற்பரப்பில் தோன்றும்.

சீரான காளான் உற்பத்திக்கு காளான் தோன்றும் அறையை முன்பே கூறியது போல தகுந்த முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மொட்டுக்கள் தோன்றி இரண்டு மூன்று நாட்களில் காளான்கள் முழு வளர்ச்சியடைகின்றன. காளான்களைத் தண்ணீர் தெளிக்குமுன் பறித்து சுத்தம் செய்து துளையிட்ட பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். முதல் அறுவடை முடிந்தவுடன் நீரை படுக்கையின் மேற்பரப்பில் தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகக் காளான் தோன்றும். இம்முறையைப் பின்பற்றி மூன்றாவது முறையாகவும் காளான் அறுவடை செய்யலாம். சிப்பிக் காளானின் பயிர் சுழற்சி ஏறத்தாழ 45 – 50 நாட்களாகும்.

பை நீக்கும் முறைகள்

காளான் வளர்ப்பிடத்தின் அறை வெப்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களுக்கு ஏற்றவாறு பை நீக்கும் முறைகளைக் கடைபிடிப்பது நலம். காற்றின் ஈரப்பதம் அதிகமாகிப் படுக்கையின் மேல் ஈரம் காயாத சூழ்நிலை இருப்பின் பாலித்தீன் பைகளை முழுவதுமாக நீக்கி விடலாம். மாறாக, அறை வெப்பம் அதிகமாகிக் காற்றின் ஈரப்பதம் குறையுமானால் பாலித்தீன் பைகளை முழுவதுமாக நீக்காமல், ஆங்காங்கே துளைகளிட்டோ, சிறு சிறு கீரல்களாகக் கிழித்தோ காளான் தோன்ற வகை செய்யலாம். இதனை, அ.அம்சவேணி, வேளாண்மை உதவி இயக்குநர், சிங்கம்புணரி மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் பெ.ஸ்ரீரங்கசெல்வி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விரிவாக எடுத்து கூறினார்கள்.

Spread the love