பயிர் உற்பத்தியில் பூச்சி நோய் மற்றும் களை மேலாண்மையில் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை கையாளும் பொழுது பின்வருவனவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
தெளிப்பு கரைசல் தயாரிக்கும் பொழுது
· கலங்கலான அல்லது தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தக்கூடாது.
· பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் தெளி;ப்பிற்கான கரைசல் தயாரிக்கக் கூடாது.
· எந்த ஒரு உடல் பாகத்திலும் தெளிப்புக் கரைசல் படக்கூடாது.
· கொள்கலன் லேபிளில் உள்ள குறிப்புகளை தவறாமல் படிக்க வேண்டும்.
· தயாரித்த 24 மணி நேரத்திற்கு பிறகு மீதியுள்ள கரைசலை பயன்படுத்தக் கூடாது.
· குருணை வடிவ பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை தண்ணீருடன் கலக்கக் கூடாது.
· தெளிப்பான்களை நுகர்ந்து பார்க்க கூடாது.
· பரிந்துரை அளவிற்குமேல் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை பயன்படுத்தினால் பயிரின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
· தெளிப்பு கரைசல் தயாரிக்கும் பொழுது சாப்பிடுதல், குடித்தல், புகை பிடித்தல் மெல்லுதல் போன்ற செய்கைகள் செய்யக் கூடாது.
தெளிப்பு செய்யும்பொழுது
· பரிந்துரையை விட அதிகளவு தெளிப்பு செய்யக் கூடாது.
· அதிகளவு வெயில் உள்ள நேரம் மற்றும் வேகமாக காற்றடிக்கும் நேரத்தில் தெளிப்பு செய்யக் கூடாது.
· மழை பெய்யும் நேரத்திற்கு முன்பு அல்லது மழை பெய்து ஓய்ந்தவுடன் உடனடியாக தெளிப்பு செய்யக் கூடாது.
· கூழ்ம அடர்வு உள்ள பு+ச்சிக் கொல்லிகளை, பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான் கொண்டு தெளிப்பு செய்யக் கூடாது.
· காற்றடிக்கும் திசைக்கு எதிரான திசையில் தெளிப்பு செய்யக் கூடாது.
· தெளிப்பு கரைசல் தயாரிக்க பயன்படுத்திய பாத்திரம், வாளிகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்திருந்தாலும வீட்டு உபயோகத்திற்கு; பயன்படுத்தக்கூடாது.
· பாதுகாப்பு கவசங்கள்ஃஉடைகள் அணிந்து தெளிப்பு செய்ய வேண்டும்.
தெளிப்பு செய்த பிறகு
· மீதியுள்ள கரைசலை தண்ணீர்போகும் வாய்க்கால், குளம், குட்டை ஆகியவற்றில் ஊற்றக்கூடாது.
· காலி கொள்கலன்களை வேறு பொருட்களை இருப்பு வைக்க எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
· தெளிப்புக்கு பின் குளிக்காமல் துணிகளையும் அலசிடாமல் சாப்பிடக் கூடாது. புகை பிடிக்க கூடாது.
· நச்சு அறிகுறி தெரியவந்தவுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்,
·