August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு துவரை வரிசை நடவு முறை பற்றிய விளக்கம்

சிவகங்கை, ஜூலை 6

இரகத் தேர்வு
· நீ்ண்டகால துவரை இரகங்களை மட்டுமே நடவு முறை சாகுபடிக்கு தேர்வு செய்ய வேண்டும். கோ8, கோ9, டீளுசு1 ஆகியவை நீண்ட கால துவரை இரகங்களாகும்.

விதை நேர்த்தி
· விதையை 0.2% கால்சியம் குளோரைடில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதையை கடினமாக்க 7 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
· ஒரு ஏக்கருக்கான கடினபடுத்திய விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி 32 கிராம், 100 கிராம் / 50 மில்லி ரைசோபியம் 100 கிராம் / 50 மில்லி பாஸ்போ பாக்டீரியம் மற்றும் 100 கிராம் / 50 மில்லி பொட்டாஷ் பாக்டீரியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்று தயாரிப்பு
· மானாவாரியாக அல்லது இறவையாக ஆகஸ்ட் மாதத்திற்குள் நடவு செய்ய ஏதுவாக 30-45 நாட்கள் முன்பாகவே விதைக்க வேண்டும்.
· 6×4 அங்குல அளவு மற்றும் 200 மைக்ரான் தடிமன் கொண்ட பாலித்தீன் பையை தேர்வு செய்யவும்.
· பாலித்தீன் பையில் நிலத்தின் மண் : மணல் : தொழுவுரம் அகியவற்றை 1:1:1 என்ற அளவில் நிரப்பி நீர் தேங்குவதை தடுக்க 3-4 துளைகள் இட வேண்டும்.
· ஒரு பாலித்தீன் பையில் 2 விதைகள் என்ற வீதத்தில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

நடவு
· நன்கு ஆழமாக உழுத நிலத்தில் இறவை பயிரில் நீண்ட கால இரகங்களுக்கு தனிப் பயிராக இருந்தால் 15 சதுர செ.மீட்டர் அளவில் 5′ x 3′ இடைவெளியிலும் ஊடுபயிராக இருந்தால் 6′ x 3′ இடைவெளியிலும் மானாவாரியாக இருந்தால் 5′ x 3′ இடைவெளியிலும் குழி தோண்ட வேண்டும்.
· நீர் தேங்கிய பகுதிகளில், குழி தோண்டுவதற்கு முன்னர் வாய்க்கால் அமைக்க வேண்டும்.

உர மேலாண்மை
· நடவு செய்த 20-30ம் நாளில் கனிம உரங்கள் 10:20:10 கிலோ கிராம் / ஏக்கருக்கு தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அளிக்கக்கூடிய யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டஷ் ஆகியவற்றை நாற்றுகளை சுற்றி இட வேண்டும்.
· அடியுரமாக துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு 10 கிகி என்ற அளவில் தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து அளிக்கவும்.

நுனி கிள்ளுதல்
· நடவு செய்த 20 – 30 நாள் முனையின் வளர்ச்சியை தடுக்க தாவரங்களை நுனியில் கிள்ளி விட வேண்டும். (மேல் 5 செ.மீ அகற்றுதல்)
· பூ உதிர்வதைத் தடுக்க 0.5மிலிஃ லி ப்ளேனோபிக்ஸ் தெளிக்கவும்.

துவரை வரிசை நடவு முறை

இத்தகவலை, சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர், வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

Spread the love