சிவகங்கை, ஜூலை 13
விதைநேர்த்தி
· ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலக்கவும். இதை விதைக்கும் முன் (சற்று முன்னர்) செய்யவேண்டும். இது உயிர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது.
· விதைகளை திரம் அல்லது மாங்கோசெப்புடன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ அல்லது கார்பென்டாசிமுடன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவிலோ கலக்கவும்.
· ரைசோபியம் 3 பாக் (600 கிராம்/எக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 3 பாக் (600 கிராம்/எக்டர்) அல்லது திரவ உயிர் உரங்களை 125 மில்லி ரைசோபியம் + 125 மில்லி பாஸ்போபாக்டீரியா அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
· விதை நேர்த்தி செய்யாவிட்டால், ரைசோபியம் 10 பாக் (2000 கிராம் எக்டர்) மற்றும் பாக்போபாக்டீரியா 10 பாக் (2000 கிராம்/எக்டர்) உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.
உரமிடுதல்
மண் பரிசோதனை அடிப்படையில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால் மானாவாரி நிலத்திற்கு 10:10:45 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய இரசாயன உரங்கள் இடவேண்டும். இறவைப் பகுதியில் 25:50:75 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய உரங்கள் இட வேண்டும். 60 கிலோ தனிம கந்தக சத்தினை 50 கிலோ இரும்பு சல்பேட்டுடன் சுண்ணாம்பு நிலங்களுக்கு இட வேண்டும்.
நுண்ணூட்டச் சத்துக்கள் அளித்தல்
· துமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண் உரக்கலவையை எக்டருக்கு 12.5 கி.கி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண் உரக்கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் 1 மாதம் வைத்து வயலில் இட வேண்டும்).
· விதைத்த உடனே நுண்உரக் கலவையை மண்ணில் இட வேண்டும்.
ஜிப்சம் இடுதல்
ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45வது நாளில் பாசனப் பயிருக்கும் 40-75வது நாளில் மானாவாரிப் பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இடவேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை இரசாயன உரங்களுடன் அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறவைப்பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்திமெலடி மற்றும் நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப்புக்களைக் குறைக்க முடியும்.
மண் அணைத்தல்
இரண்டாவது கைக்களை எடுத்த பின்பு மண் அணைக்க வேண்டும். இது நிலக்கடலையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். விதைத்த 40-45ம் நாள் மண் அணைப்பதன் மூலம் களைகள் மண்ணிற்குள் செல்வது தடுக்கப்படும் மற்றும் காயின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குறிப்பு:
· மண் அணைத்தல் செடி நிலைப்பதற்கு ஒரு ஊடகமாக பயன்படும்.
· நீண்ட கைப்பிடி கொண்ட மண்வெட்டி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
· விதைத்த 45ம் நாளுக்குப் பிறகு மண்ணில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
ஊட்டச்சத்து கலவை தெளிப்பு
பெரிய பருப்புகள் கொண்ட இரகங்களில், காய்களில் பருப்பின் வளர்ச்சி குறைபாடு என்பது ஒரு பெரிய இடர்பாடு ஆகும். இதைத் தவிர்த்து நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளைப் பெறுவதற்கு பல ஊட்டச்சத்துக்களை கலந்து தெளிக்க வேண்டும். இந்தக் கலவையை தயாரிக்க டி.ஏ.பி 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் 1 கிலோ மற்றும் போராக்ஸ் (வெண்சுரம்) 0.5 கிலோவினை 37 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறு நாள் காலை இந்தக் கலவையை வடிகட்டினால் 32 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதனை 468 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 500 லிட்டர் அளவில் தயார் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பிளானோபிக்ஸ் 350 மில்லியை இதில் சேர்த்து விதைத்த 25ம் மற்றும் 35ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
பயிர் வினையியல்