October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

எஸ்.புதூர் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம்

சிவகங்கை, அக்.8

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் (ளுளுநுPநுசுளு)– அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் பேசுகையில், வேளாண்துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் வேளாண் இடுபொருட்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நுண்ணூட்ட உரம் அதன் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அந்தந்த துறை அலுவலர்கள் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். துணை வேளாண்மை அலுவலர் ஞானசேகர், பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெ.ஸ்ரீரங்கசெல்வி அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி, துணை வேளாண்மை அலுவலர் ஞானசேகர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர், மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் அழகர், மாரிஸ்வரன், கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள். அட்மா திட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் காணொலி (Piஉழ pசழதநஉவழச) காட்சி மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப செய்திகள் காண்பிக்கப்பட்டது. உழவர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் க.கோபாலகிருஷ்ன் செய்திருந்தார். கூட்டத்தின் முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பெ.ஸ்ரீரங்கசெல்வி நன்றி கூறினார்.

Spread the love