June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஏசிசி நிறுவன நிகரலாபம் 74 சதம் அதிகரிப்பு

புது தில்லி, ஏப்.20

சிமெண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமான ஏசிசி நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.562.59 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏசிசி நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஏசிசி நிறுவனம் விற்பனை அதிகரிப்பு மற்றும் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக ரூ.562.59 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.323.02 கோடியுடன் ஒப்பிடுகையில் 74.17 சதம் அதிகமாகும்.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,501.71 கோடியிலிருந்து 22.57 சதம் அதிகரித்து ரூ.4,291.97 கோடியானது. செலவினம் ரூ.3,083.78 கோடியிலிருந்து 16.29 சதம் உயர்ந்து ரூ.3,586.19 கோடியானது என ஏசிசி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

ஏசிசி நிறுவனம் ஜனவரி-டிசம்பர் காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love