May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஏத்தர் 450 இ-ஸ்கூட்டர் டெலிவரி கோவை, திருச்சியில் தொடங்குகிறது

ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களில் தொடங்கவுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.60 லட்சம் ஆகவும், 450 ப்ளஸ் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.41 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் டெலிவரிக்காக கோவை ராம்நகரில் உள்ள இ-வைகல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் ஏத்தர் நிறுவனம் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அதேபோன்று திருச்சியில் அண்ணாமலை நகரில் உள்ள வேலா ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடனும் ஏத்தர் கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு நகரங்களின் மூலம் தமிழகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் நகரங்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. ஏத்தர் ஸ்கூட்டரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ரைட்கள் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் இன்னும் சில வாரங்களில் ஏத்தர் விற்பனை மையங்கள் திறக்கப்படும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் & டெலிவரிகளை துவங்குவதுடன் ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்களையும் அமைக்க ஏத்தர் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கோவையில் 5 சார்ஜிங் மையங்கள் மற்றும் திருச்சியில் 2 மையங்களை அமைக்கும் பணிகளில் ஏத்தர் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 18 நகரங்களில் ஏத்தரின் 120 பொது ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஏத்தரின் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 85 கி.மீ. ரேஞ்ச் கொண்டுள்ளது.

Spread the love