தாவிர உயிரி தொழல் நுட்பவியலில் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கது தாவர திசு வளர்ப்பாகும்.
தாவர திசு வளர்ப்பு என்றால் என்ன?
தாவர திசு வளர்ப்பு என்பது ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாகும், இது சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் பெரிய அளவிலான தாவர இனப்பெருக்கம் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தாவர ஊடகம் ஒரு தாய் தாவரத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது, மேலும் இந்த செல்கள் அல்லது திசுக்கள் பின்னர் வளர்ந்து ஆயிரக்கணக்கான ஒரே மாதிரியான தாவரங்களாகப் பெருக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு, தாவர மரபியலைப் பாதுகாக்கவும், அதிக வீரியமுள்ள தாவரங்களை உருவாக்கவும், இறுதியில் பணத்தை மிச்சப்படுத்தவும், வருவாயை அதிகரிக்கவும் உதவுகிறது.
புதிய தாவரங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் நோய் கிருமிகளின் தாக்குதல் இல்லாத நன்கு வரையக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்து நிலைமைகளின் கீழ் ஒரு ஊடகத்தில் வளரும். இந்த கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகள் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கான உகந்த சூழலை வழங்க உதவுகிறது.
உலகளவில் தவிர திசு வளர்ப்பின் தந்தை என்றழைக்கபடுபவர், காட்லீப் ஹேபர்லேண்ட் ஆவார். இந்தியாவில் இதன் வளர்ச்சிக்கு காரணமானவர் ஸ்ரீ பஞ்சனன் மகேஸ்வரி ஆவார்.
தாவர திசு வளர்ப்பு: விவசாயிகளுக்கு நன்மைகள்:
பழமையான பயிர் பெருக்க முறையை விட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் தாவர திசு வளர்ப்பு முறையில் கீழ்கண்ட நன்மைகள் உள்ளன.
· திசு வளர்ப்பு முறையில் அவற்றின் மரபு தன்மை மாறாமல், அதிக வீரிய தன்மைமிக்க தாவரங்களை உருவாக்கலாம்.
· தாய் தாவரத்தின் நற்பண்புகளான பூக்கும் திறன், திரட்சியான கனி இன்னும் பல பண்புகளை அச்சு அசலாக இளந்தாவரத்திலும் உண்டாக்கலாம்.
· நல்லமு திர்ச்சியான தாவரத்தை உற்பத்தி செயய்லாம்.
· உள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பரிய வளர்ப்பு முறையைவிட வேகமாக உள்ளது.
· விதை உற்பத்தி செய்ய இயலா பயிர்களை இம்முறையைப் பயன்படுத்தி அதிகளவில் உற்பத்தி செய்யலாம். மேலும் கடுமையான மரபியல் குறைபாடால் பேறுப் பெருக்கம் செய்ய முடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாக செய்யலாம்.
· ஒரு வகை படுத்தப்பட்ட குத்து செடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.
· நோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிர செய்யல்லாம்.
· தேவைக்கேற்ப தாவரங்களைஅதிகநாட்கள் எந்த செலவுமில்லாமல் பராமரிக்கலாம்.
· திசு வளர்ப்பு முறை வைரஸ் நோய் அகற்ற, மரபு மாற்றம், உடலம் பண்பக கலப்பு பயிர் முன்னேற்றம் மற்றும் முதல்நிலை ஆராய்ச்சிக்கு உபயோகப்படுகிறது.
· அழியும் நிலையிலுள்ள தாவர இனங்களை இம்முறையின் உதவியால் பயிர் பெருக்கம் செய்து அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
தகவல் : மு. பிரீத்தி, முதுகலை வேளாண்மை மாணவி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல் : jjpreethi6@gmail.com