புது தில்லி, மே 13
கடந்த ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து சில்லறைப் பணவீக்கம் 4.29 சதமாக குறைந்துள்ளது. இதுகுறித்து புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் சில்லறைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 5.52 சதமாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து ஏப்ரலில் இப்பணவீக்கம் 4.29 சதமாக குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 4.87 சதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஏப்ரலில் 2.02 சதமாக குறைந்துள்ளது என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ நிதி கொள்கையை வகுக்க நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கத்தை முக்கிய காரணியாக கருதுகிறது.