புது தில்லி, மே 4
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி அளவு சுமார் 3 மடங்கு வளர்ச்சி பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
ஏப்ரல் மாத காலக்கட்டத்தில் இறக்குமதி அளவு அதிகரித்துள்ள காரணத்தால், தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையின் அளவீடு அதிகரித்து வருகிறது.
இன்ஜினியரிங், நவரத்தினம் மற்றும் நகைகள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்த காரணத்தால் நாட்டின் ஏற்றுமதி அளவீடு சுமார் மடங்கு அதிகரித்து 30.21 பில்லியன் டாலரை தொட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதாவது ஏப்ரல் 2020ல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு 10.17 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 3 மடங்கு வளர்ச்சி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏப்ரல் 2020ல் நாட்டின் மொத்த இறக்குமதி அளவீடு 17.09 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இதன் அளவு 2021 ஏப்ரல் மாதத்தில் 45.45 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கடந்த வருடம் 6.92 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு இந்த ஏப்ரல் 2021ல் 15.24 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.