June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஏப்.27ல் சியோமி 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்

புது தில்லி, ஏப்.24

சியோமி நிறுவனம் 75-இன்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 27-ம் தேதி மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் போன்ற வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியின் சிறப்பம்சங்களாவது:

இந்த மாடல் 4கே யுஎச்டி பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 3,840 மு 2,160 தெளிவுத்திறன் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகிறது.

1.5ஜிகாயஹர்ட் மீடியாடெக் எம்டி9611 பிராசஸர் வசதியுடன் மாலி ஜி52 P2 GPU ஆதரவு உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ பொறுத்தவரை,30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது, இதில் இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் நான்கு வூஃப்பர்கள் உள்ளன. மேலும் இது டால்பி ஆடியோவைக் கொண்டுள்ளது.

சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடலின் விலை ரூ.1,19,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் விற்பனைக்கு வரும்போது குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love