May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனம் தீவிரம்

புது தில்லி, மே 3

ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில் டாடா நிறுவனம் அதிக விலை குறிப்பிட்டு முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 சத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் நடந்த ஆரம்பகட்ட ஏலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன உரிமையாளர் அஜய் சிங்கை காட்டிலும் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் நிறுவனம் அதிக விலை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாடா நிறுவனம் முன்னிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. தற்போது, கோவிட் தொற்று 2வது அலை காரணமாக இதன் விற்பனை தாமதமாகும் என கருதப்படுகிறது. மத்திய அரசோ இந்தாண்டுக்குள் விற்பனையை முடிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 1953ல் டாடா நிறுவனத்திடம் இருந்தே ஏர் இந்தியா பங்குகளை 100 சதம் மத்திய அரசு வாங்கி, பொதுத்துறை நிறுவனமாக மாற்றியது. இப்போது, இதை மீண்டும் தன்வசப்படுத்துவதில் டாடா குழுமம் தீவிரமாக உள்ளது.

Spread the love