May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஏலக்காய் ஏலம் ரத்து ஸ்பைசஸ் வாரியம் தகவல்

தேனி, மே 12

கரோனா தடுப்பு ஊரடங்கால், கேரளா புத்தடி, தேனி மாவட்டம் போடியில் நடைபெறும் ஏலக்காய் ஏலம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைசஸ் (நறுமணப்பொருள்) வாரியம் அறிவித்துள்ளது.

ஏலக்காய் ஏலம் புத்தடி, போடியில் தினமும் காலை, பகல் என இரண்டு முறை இரண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. கொச்சி ஸ்பைசஸ் வாரியத்தின் மின்னணு ஏல மையங்களில் இந்த ஏலம் நடைபெறுகிறது. மே 8 முதல் மே 16 வரை கேரளாவிலும், மே 10 முதல் மே 24 வரை தமிழகத்திலும் கரோனா தடுப்பு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மறு உத்தரவு வரும் வரை ஏலக்காய் ஏலம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைசஸ் வாரியம் தெரிவித்துள்ளது.

Spread the love