October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஐஎம்பிஎஸ் பண பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு: ஆர்பிஐ

மும்பை, அக்.9

ஐஎம்பிஎஸ் பண பரிவர்த்தனை வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக ஆர்பிஐ உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இணையதள வங்கி சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய நெஃப்ட், ஐஎம்பிஎஸ், ஆர்டிஜிஎஸ் சேவைகள் உள்ளன. இந்நிலையில் இணையதள வங்கி சேவையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தற்போது ஆர்பிஐ தனது நாணய கொள்கை கூட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐஎம்பிஎஸ் பணப் பரிமாற்ற சேவையில் ஒரு நாளுக்கு அதிகப்படியாக ரூ.2 லட்சம் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்த வரம்பு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படும் என ஆர்பிஐயின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார். ஐஎம்பிஎஸ் மற்றும் நெஃப்ட் பணப் பரிமாற்றத்தை 24 மணி நேரமும் செய்யச் சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பணப் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love