June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஐசிஐசிஐ வங்கி தனிப்பட்ட நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,403 கோடி ஈட்டியது

மும்பை, ஏப்.26

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி கடந்தற ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.4,403 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ள செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய தனிப்பட்ட வருவாய் ரூ.23,953 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.23,443.66 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம் ஆகும். மேலும், வங்கியின் தனிப்பட்ட நிகரலாபம் ரூ.1,221 கோடியிலிருந்து 3 மடங்கிற்கும் மேல் அதிகரித்து ரூ.4,403 கோடியைத் தொட்டுள்ளது.

மேலும், ஒட்டுமொத்த அடிப்படையில் வங்கியின் வருவாய் ரூ.40,121 கோடியிலிருந்து ரூ.43,621 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோன்று வங்கி ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.1,251 கோடியிலிருந்து ரூ.4,886 கோடியாக அதிகரித்துள்ளது.

2020 மார்ச் 31ல் 5.53 சதமாக இருந்த மொத்த வாராக் கடன் 2021 மார்ச் இறுதியில் 4.96 சதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் இதே காலகட்டத்தில் 1.41 சதத்திலிருந்து 1.14 சதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வாராக் கடன் இடர்பாடுகளுக்கான ஒதுக்கீடும் ரூ.5,967.44 கோடியிலிருந்து ரூ.2,883.47 கோடியாக குறைந்ததாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Spread the love