September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு : மாவட்ட வேளாண் வானிலை மையம் தகவல்

சேலம், செப்.14

சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.பிரபாகரன், வானிலை பதிவாளர் கூறியதாவது,

சேலம் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (15.09.2021 முதல் 19.09.2021 வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34oC ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23oC ஆகவும் இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 0 முதல் 8 கி.மீ ஆக வீசக்கடும். வரும் நாட்களில் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுவதால் வயல்களில் பயிர்களுக்கு முறையான வடிகால் வசதி அமைக்கவும்.

நெல்லில் பொருளாதார சேத நிலை அளவு: தழைப் பருவத்தில் 10 சதவிகிதம் இலைச் சேதம் மற்றும் பூத்தல் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச்சேதமும் ஏற்படும். டிரைக்கோகிரேம்மாகிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44, மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை @ 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்/எக்டர்/முறை) என்ற அளவில் விடவேண்டும்.

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை தெளிக்கவும்.
• அசிபேட் 75% SP 666-1000 கி/ஹெக்டேர்
• அசார்டியாக்டின் 0.03% 1000 மி.லி/ஹெக்டேர்
• குளோரோடேரேனிலிபுருள் 18.5% SC 150 கி.கி/ஹெக்டேர்
• புளுபென்டிமைட் 39.35% SC 50 கி/ஹெக்டேர்
• தையமீத்தாக்கம் 25% WG 100 கி/ஹெக்டேர்

மல்லியில் சிவப்பு சிலந்தி பூச்சியை கட்டுப்படுத்த பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
பெனசாக்கின் 10 % EC @ 2 மி/லி
ப்ரோபர்கைட் 57 % EC @ 2 மி/லி
ஈரமானகந்தகம் 50 WP @ 2 கி /லி

கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பான் மேலாண்மைக்கு
· பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் காய்களை அகற்றவும்.
· செயற்கை பைரெத்ராய்டு பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
· நடவு செய்த ஒரு மாதத்தில் தொடங்கி வேம்பு விதையின் சாறு 5 % அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
Ø அசாடிராக்ட்டின் 1.0% EC – 3.0 மிலி/லி
Ø அசாடிராக்ட்டின் 0.03 % WSP – 5.0 கிராம்/லி .
Ø டைமிய்தோவேட் 30 % EC – 7.0 ml/10 லி .
Ø எமாமெக்டின்பென்சோயேட் 5 % SC – 4 கிராம்/10 லி.
ப்ளுபெண்டிமைடு 20 WDG – 7.5 g/10 லி .

Ø கால்நடைகளுக்கு 25-30 கிராம் கனிம கலவையை சேர்ப்பது இனப்பெருக்கத்திற்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்களை வழங்குகிறது. மேலும் அங்கு கருவுறாமை கோடை கால நிகழ்வுகளை குறைக்கிறது.

Ø காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் கோழிகளின் தீவனங்கள் சிதற வாய்ப்புள்ளது. கோழிகளுக்கு குளிர்காய்ச்சல் கூட ஏற்பட வாய்ப்புள்ளதால் கோழி கூடாரங்களை
சுற்றிலும் அடைத்தவாறு கோணிப்பைகளை கட்டி தொங்க விடவும்.

Ø மரவள்ளியில் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த: பாதிக்கப்பட்ட நுனிக்குருத்துக்களை அகற்ற வேண்டும். மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட செடிகளை சேகரித்து அளிக்க வேண்டும். பாதிப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் போது அசாடிராக்ட்டின் 0.15% @ 5.0 மி.லி./லிட்டர் அல்லது மீன் எண்ணை ரோசின் சோப்பு @ 2.0 மி.லி./லிட்டர் தெளிக்க வேண்டும். தேவையின் அடிப்படையில் பிலோனிக்காமிட்50 WG @ 0.30 கிராம் /லிட்டர்அல்லதுதயாமீதாக்சாம் 25 WG @ 0.50 கிராம்/லிட்டர் அல்லது ஸ்பைரோடேற்றாமேட் 150 OD @1.25 மி.லி./லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்துகளை சுழற்சி முறையில் கைத்தெளிப்பான் பயன்படுத்தி மட்டுமே தெளிக்க வேண்டாம். செடிகளின் அனைத்து பகுதிகளிலும் வயல் மற்றும் வரப்புகளில் உள்ள இலைகள், களைகள் மீதும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும்.

Ø தென்னையில் சிவப்பு கூண்வண்டின் அறிகுறிகள் தென்பட்டால்கரும்புச்சாறு 2.5 கி.கி + ஈஸ்ட்மாத்திரை 5 கி + 5 மி.லி அசிடிக் அமிலம் (அல்லது அன்னாசி/கரும்புச்சாறுடன் ஊற வைத்தது) + நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானைகள் ஏக்கருக்கு 30 வீதம் தென்னந்தோப்பில் வைத்து, கூண்வண்டு களைக் கவரச் செய்து அழிக்கலாம். பிரமோன் பொறி எக்டருக்கு ஒரு பொறி அமைக்கவும்.

Ø கறவை மாடுகளில் மடிவீக்க நோயை கட்டுப்படுத்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு பால் மடியை கறப்பதற்கு முன்பும் பின்பும் சுத்தம் செய்யவும்.

Spread the love