October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:மாவட்ட வேளாண் வானிலை மையம் தகவல்

சேலம், அக்.12

சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.பிரபாகரன், வானிலை பதிவாளர் கூறியதாவது,

வரும் ஐந்து நாட்களுக்கு (13.10.2021 முதல் 17.10.2021 வரை)
வட்டாரம் மழைஅளவு (துது) வானிலைநிலவரம்
ஆத்தூர் 75 கனமழை
அயோத்தியபட்டினம் 107.3 கனமழை
கங்கவல்லி 25.8 மிதமானமழை
எடப்பாடி 96.2 கனமழை
காடையாம்பட்டி 142.2 கனமழை
கொளத்தூர் 100.6 கனமழை
கொங்கணாபுரம் 86.3 கனமழை
மகுடம்சாவடி 95.1 கனமழை
மேச்சேரி 72.4 கனமழை
நங்கவல்லி 74.3 கனமழை
ஓமலூர் 67.4 கனமழை
பனமரத்துப்பட்டி 88 கனமழை
பெத்தநாய்க்கன்பாளையம் 103.9 கனமழை
சேலம் 145 கனமழை
சங்ககிரி 97.2 கனமழை
தலைவாசல் 9.3 லேசானமழை
தாரமங்கலம் 67.6 கனமழை
வாழப்பாடி 43 மிதமானமழை
வீரபாண்டி 74.5 கனமழை
ஏற்காடு 155.8 கனமழை

Ø சேலம் மாவட்டத்தில் அடுத் ஐந்து நாட்களுக்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை32லிளீ ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 21லிளீ ஆகவும் இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 6 முதல் 8 கி.மீ ஆக வீசக்கடும்.
Ø சேலம் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களில் சில வட்டாரங்களில் லேசான மற்றும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
Ø மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.
Ø தென்னை மரத்தை சுற்றி வட்டப்பாத்திகள் அமைத்து மழை நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Ø கனமழை மற்றும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் வயல்களில் வடிகால் வசதி அமைத்து பயி ர்சேதத்தை தவிர்க்க வேண்டும் மற்றும் மழைநீர் வீணாவதை தவிர்த்து அதை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.
Ø உழவர் பெருமக்கள் அனைவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்பட்ட வேளாண் சார்ந்த செயலிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (த.வே.ப.கஏ.ஏ.எஸ், மேக்தூட்&தாமினி).
Ø வரும் வாரங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புள்ளதால் பூச்சி கொல்லி அல்லது களைக்கொல்லி மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கவும்.
Ø தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி மற்றும் இலைக்கருகல் நோய் தாக்கம் தென்பட்டால் கார்பென்டாசிம்1.0 கிராம்/லிட்டர் அல்லது புரோபிகோனசோல் 1.0 மி.லி/லிட்டர் அல்லது மேங்கோசெப் 2.5 கிராம்/லிட்டர் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மிலி/லிட்டர் கலந்து 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
Ø நெல்லில் இலைசுருட்டுப்புழுதென்பட்டால்அசிபேட் 95 றீறூ 600 கிராம் / ஹெக்டர்அல்லதுதயாமீதாக்கசாப் 25 நிறூ 100கிராம் / ஹெக்டர்என்றஅளவில்தெளிக்கவும்
Ø மழை காலங்களில் இளம்கோழிக் குஞ்சுகளை அடைகாப்பானில் வைத்து வளர்க்கும் பொது 4 முதல் 5 வாரங்களுக்கு ஒரு கோழிக்குஞ்சுக்கு 2 வாட் வீதம் செயற்கை வெப்பம் அளிக்க வேண்டும். கோழிப்பண்னைகளில் சாரல் மழையினால் ஈரம் உண்டாவதை தடுக்க பண்ணையின் பக்கவாட்டில் தார்பாலின் / சில்பாலின் பைகளை கட்டி தொங்கவிடவும்.
Ø மழைக் காலங்களி ல்மாடுகளின் கொட்டகை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காதவாறும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாடுகளில் மடிநோய் உண்டாவதை தடுக்க பொட்டாசியம் பர்மாங்கனேட் பால் கறப்பதற்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி கலந்து தண்ணீரில் மடி மற்றும் பால் கறப்பவரின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
Ø நாட்டுக் கோழிகளை ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்க்கும் போது ஆழ்கூளம் (கடலைப்பொட்டு, நெல்உமி) போன்றவை நனைந்து கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆழ்கூளம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டால் சுண்ணாம்புத்தூளை தூவி கிளறிவிட வேண்டும். இதனால் ஆழ்கூளத்தின் ஈரப்பதம் குறைவதுடன், சுண்ணாம்புத் தூள் கிருமிநாசினியாகவும் செயல்பட்டு கோழிகளில் நோய் பரவுவதை தடுக்கிறது .
Ø நாட்டுக் கோழிகளில் வெள்ளைக்கழிச்சல் நோய் வராமல் தடுக்க 5-7 நாட்களில் RDVF தடுப்பூசியும், 24 வது நாளில் லசோட்டா தடுப்பூசியும், பிறகு 21/2 மாதம் தொடங்கும் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறையும் RDVK தடுப்பூசி அளிக்க வேண்டும்.
Ø கறவை மாடுகளில் கன்று ஈனுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இருந்து சுண்ணாம்பு சத்து உள்ள தீவனத்தை குறைவாக அளித்தும், கன்று ஈன்றவுடன் 10-15 நாட்களுக்கு அதிக சுண்ணாம்பு சத்துள்ள தீவனத்தை அளிப்பதன் மூலம் பால் சுரம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
Ø தற்போது பொழிந்த மழையின் காரணமாக மாடு தொழுவத்தில் மற்றும் மாடு காட்டும் இடங்களில் ஈரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதனால் மடி நோய் வர வாய்ப்புள்ளது. எனவே கட்டுதரைகளை உலர்வாகவும் சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203. 0427 242 2550, 90955 13102, 70109 00282.

Spread the love