May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஐபிஎல் முழுமையாக நடத்த முடியாமல் போனால் பிசிசிஐக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும்

மும்பை, மே 8

ஐபிஎல் முழுமையாக நடத்த முடியாமல் போனால் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோவிட் தொற்று அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ-பபுள்) மீறி வீரர்கள் இடையே எப்படி கோவிட் பரவியது என்பது தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் உள்ளது.

மேலும், 4 அணிக்குள் கோவிட் தொற்று ஊடுருவியதால் வேறு வழியின்றி இத்தொடரை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல்லில் இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ளது. ஐபிஎல் போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். இது தொடக்கட்ட மதிப்பீடு தான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையயாட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Spread the love