புது தில்லி, ஏப்.21
ஆதித்ய பிர்லா சன் லைப் ஏஎம்சி நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: ஆதித்ய பிர்லா சன் லைப் ஏஎம்சி நிறுவனம், ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் கனடாவை சேர்ந்த சன் லைப் பைனான்´யல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம்.
மேலும், இந்த பங்கு வெளியீட்டின்போது ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் வசம் இருக்கும், ஆதித்ய பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., பங்குகளில், ரூ.5 முகமதிப்பு கொண்ட, 28.50 லட்சம் பங்குகளை விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்நிறுவன பங்குகளை வைத்திருக்கும் இன்னொரு கூட்டு நிறுவனமான, சன்லைப் இந்தியா ஏஎம்சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், 3.60 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டின் அறிக்கையின் படி, ஆதித்ய பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., நிறுவனம், ரூ.2.38 லட்சம் கோடி சொத்தை நிர்வகித்து வருகிறது.