September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஐபிஓ வெளியிட பைஜூஸ் நிறுவனம் திட்டம்

பெங்களுரு, செப்.11

இணையம் வாயிலாக கல்வி வழங்கும் முன்னணி நிறுவனமான பைஜூஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஆசிரியர் பைஜூ ரவீந்திரன் என்பவரால் உருவாக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனம், குறுகிய காலத்தில் மிகச் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பேரிடரால் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் கல்வி முறை அறிமுகமாகியுள்ளது.

இது, பைஜூஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிய சாதகமான அம்சமாக அமைந்துள்ளது.

மேலும், இந்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், பைஜூஸ் நிறுவனம், தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களிடம் நிதி திரட்டுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறது. இதன் வாயிலாக, ரூ.2,600 கோடி – 4,300 கோடி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு பைஜூஸ் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகக் குறைந்த முதலீட்டில் துவக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, ரூ.1 லட்சத்து 50 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Spread the love