சென்னை, மே 19
ஐரோப்பிய இருசக்கர வாகன டயர் சந்தையில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் அடியயடுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஐரோப்பிய இருசக்கர வாகன டயர் சந்தையில் நிறுவனம் புதிய அறிமுகத்தின் மூலம் அடியயடுத்து வைத்துள்ளது. யூரோகிரிப் பீ கனெக்ட் என்ற பெயரில் ஸ்கூட்டர்களுக்கான டயர்களை நிறுவனம் ஐரோப்பிய சந்தைகளில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த வகை டயர்கள் வரும் மாதங்களில் 40 வெவ்வேறு அளவுகளில் சந்தைகளில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் டயர் தயாரிப்புகளை பிரத்யேகமாக வடிவமைத்து தர நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என அந்த அறிக்கையில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.