June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் விற்பனைக்கு வந்தது

ஐரோப்பிய சந்தையில் ஒப்போ ஏ54 5ஜி சாதனத்தை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்பில் ரூ.19,500 என்ற விலையைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பர்ப்பிள் மற்றும் ஃப்ளூயட் பிளாக் வண்ணங்களில் வருகிறது. பிற சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பான தகவல்கள் இல்லை.

இந்த ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் தெளிவு, 1080 x 2400 பிக்சல்கள் துல்லியம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம், 90.5 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகிதம் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி35 சிப்செட் புராஸசருடன் அட்ரினோ 619 ஜிபியு திறனையும் கொண்டிருக்கும். இது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது. அத்துடன் மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது.

ஒப்போ ஏ54 5ஜி ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் இரட்டை 2 எம்பி கேமராவுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் முன்பக்கத்தின் மேல் இடது மூலையில் 16 எம்பி செல்ஃபி ஷூட்டர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெற்றுள்ளது.

Spread the love