May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்

சென்னை, மே 10

தனது புதிய ஒப்போ ரெனோ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் ஒப்போ நிறுவனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தகல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாவது:

6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32எம்பி செல்பீ கேமரா, 64எம்பி ரியர் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் இந்த அசத்தலான ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love