May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒராண்டு வாழ் மற்றும் மெல்லிய தண்டுகளையுடைய பல்லாண்டு வாழ் மலர்ச் செடிகளை சாகுபடி செய்வதற்கான தொழில்

நுட்பங்கள்

ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள்

இந்த வகையைச் சேர்ந்த மலர்ப் பயிர்கள் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு பூத்து, காய்த்து, ஒரு வருடத்திலேயே அல்லது ஒரு பருவத்திலேயே தங்களது வாழ்நாட்களை முடித்துக் கொள்கிறது. இந்த ஒராண்டு வாழ் மலர்ப் பயிர்கள் சிறிய அழகுத் தோட்டங்களிலும், மிகப் பெரிய பொது அழகுத் தோட்டங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய மலர்ப் பயிர்கள் குறைந்த வளர் பருவ நிலையையும், அதிக பூக்கும் பருவ காலத்தையும் கொண்டுள்ளது. ஓராண்டு வாழ் மலர்ப் பயிர்கள் வெவ்வேறு வண்ணங்களில் பூத்து, அழகுத் தோட்டத்தில் மென் மேலும் அழகு சேர்க்கிறது. இத்தகைய குணங்களைக் கொண்ட மலர்ப் பயிர்களை அழகுத் தோட்டத்தில் பயிரிடுவதற்கும் அதன் வாசனையை பகிர்வதற்கும், தோட்டக்காரர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

ஓராண்டு வாழ் மலர்ச்செடிகளின் முக்கிய பணிகள்

  1. ஓராண்டு வாழ் மலர்ச் செடிகளை தரையிலோ (அல்லது) மண் தொட்டிகளிலோ வளர்க்கலாம்.
  2. இவை தோட்டத்திற்கு சமமான அழகு நிலையை தோற்றுவிக்கிறது.
  3. ஓராண்டு வாழ் மலர்ச் செடிகளை, தனியாகவோ (அல்லது) பல்லாண்டு வாழ் மலர் பயிர்களுடன் கலந்து வரிசைகளை (mixed borders) அமைக்கலாம்.
  4. பெரும்பாலான ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள், அதிக குளிர்ச்சி நிலையிலுள்ள பசுமைக்குடிலில் வருடம் முழுவதும் வளர்க்கலாம்.
  5. அழகு தோட்டங்களில் அமைந்துள்ள, நிரந்தர குத்துச்செடி வரிசை மற்றும் பூத்துக் குலுங்கும் மர வரிசைகளுக்கான இடைவெளியை நிரப்புவதற்கு ஓராண்டு வாழ் மலர்ச்செடிகள் பயன்படுகின்றன.
  6. கொடி வகை ஓராண்டு வாழ் மலர்ச் செடிகளான, சுவீட் பீ (Sweet pea), நாஸ்டர்சியம் (Nasturtium) மற்றும் மார்னிங் குளோரி (Morning Glory) ஆகியவற்றை தோட்டங்களிலுள்ள சிறிய பள்ளங்களிலும், வேலிகளிலும், வயதான வெட்டப்பட்ட மரத்தண்டுகளிலும் வளர்த்து தோட்டங்களுக்கு அழகு சேர்க்கலாம்.
  7. நன்கு பூக்கும் ஓராண்டு வாழ் மலர்ச்செடிகளை, பாறைத் தோட்டங்களில் (Rock garden) வளர்த்து பயன் பெறலாம்.
  8. ஓராண்டு வாழ் மலர்ச்செடிகளில், கேன்டிட@ப் (ஊயனேல வரகவ), பெட்டுனியா (Pநவரnயை), ப்ளாக்ஸ் (phடடிஒ), போர்ட்டுலக்கா (Pடிசவரடயஉய), வெர்பீனா (ஏநசநெயே) மற்றும் ஜின்னியா லினாரிஸ் (Zinnயை டiநேசளை) போன்ற செடிகளை, சன்னலறைப் பெட்டிகளிலும் (றiனேடிற bடிஒநள) மற்றும்தொங்கு கூடைகளிலும் (ழயபேiபே யௌமநவள) வளர்த்து பயன் பெறலாம்.
  9. ஓராண்டு வாழ் மலர்ச் செடிகளின் வகைகள்
    அ. குளிர்கால ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள்:விதை தூவுவதற்கான பருவ காலம் ஜனவரி முதல் ஜுன் வரை (எ.கா) சைனா ஆஸ்டர் (ஊhiயே யளவநச), கார்னேசன் (உயசயேவiடிn), கேலண்டுலா (உயடநனேரடய), ஆன்ட்டிர்கினம் (Aவேசைசாiரேஅ), டையான்தஸ் (னுயைவோரள),நாஸ்டர்சியம் (சூயளவரசவரைஅ),சுவீட் பீ (ளுறநநவ pநய) சால்வியா (ளுயடஎயை), வெர்பீனா (ஏநசயெயே), வையோலா (எiடிடய).
    ஆ. கோடைகால ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள் : விதை தூவுவதற்கான பருவம் செப்டம்பர் – அக்டோபர் (எ.கா) காஸ்மோஸ் (ஊடிளஅடிள), சூரியகாந்தி (ளுரn கடடிறநச) கெய்லார்டியா (ழுயடைடயசனயை), போர்டுலகா (Pடிசவரடயஉய) டைத்தோனியா (கூiவாடிnயை) மற்றும் ஜின்னியா (Zinnயை).
    இ. மழைகால ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள:: விதை தூவுவதற்கான பருவம் ஜுன்-ஜூலை மற்றும் செப்டம்பர்-அக்டோபர் (எ.கா) கோழிக்கொண்டை (ஊடிஉமளஉடிஅb), பால்சம் (Bயடளயஅ),வாடாமல்லி (ழுடிஅphசநயே) மற்றும் செண்டு மல்லி (ஆயசபைடிடன).

ஓராண்டு வாழ் மலர் செடிகள் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  1. கடினத் தன்மையுடைய ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள் (ழயசனல Anரேயடள) :இத்தகைய மலர்ச்செடிகள் திறந்த வெளியில் எவ்வித சூழ்நிலைகளிலும் நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்கும்.
  2. ஓரளவு கடினத் தன்மையுடைய ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள் (ளுநஅi hயசனல யnரேயடள) :இந்த வகை மலர்ச்செடிகளின் விதை முளைப்பதற்கு பசுமைக் குடில்கள் அவசியம். அதன் பின்னால் செடிகளை மலர்ப்படுக்கைகளில் வளர்க்கலாம்.
  3. மெல்லிய தண்டுகளையுடைய ஓராண்டு வாழ் மலர்ச்செடிகள் (கூநனேநச Anரேயடள) :இந்த வகை மலர்ச் செடிகள் பாதுகாக்கப்பட்ட அறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
    சமவெளிப் பகுதியில் குளிர்காலங்களில் வளரக்கூடிய ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள் :ஆன்ட்டிர்கினம் (Aவேசைசாiரேஅ), சுவீட் பீ (ளுறநநவ pநய), @பேன்சி (Pயளேல), கார்னேசன் (உயசயேவiடிn) சினரேரியா (உiநேசயசயை) மற்றும் வைலட் (எiடிடநவ).
    சமவெளிப் பகுதியில் கோடைக்காலங்களில் வளரக்கூடிய ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள் : செண்டுமல்லி (ஆயசபைடிடன), ஜின்னியா (Zinnயை) மற்றும் டைத்தோனியா (கூiவாடிnயை).
    மெல்லிய தண்டுகளையுடைய பல்லாண்டு வாழ் மலர்ச் செடிகள்
    குத்துச் செடி வகையைச் சேர்ந்த மெல்லிய தண்டுகளையுடைய மலர்ச்செடிகள் ஆங்கிலத்தில் ஹெர்பேசியஸ் பெரணியல்ஸ் (ழநசயெஉநடிரள Pநசநnnயைடள) என்றழைக்கப்படுகிறது. இந்த வகை மலர்ச் செடிகளில், இரண்டு அல்லது மூன்று, வெப்ப மண்டலத்தில் நன்கு வளரும். ஆனால், மற்ற மலர்ச்செடிகள் நன்கு வளர்வதற்கு குளிர் பிரதேசங்களை அதிகம் விரும்புகின்றன. இவ்வகை மலர்ச் செடிகளை விதைகள், குச்சிகள் மற்றும் வேருடன் ஒட்டிய தண்டுகள் (டிகக ளுநவ) மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
    வெப்பமண்டலத்திற்கு உகந்த மெல்லிய தண்டு பல்லாண்டு வாழ் மலர்ச் செடிகள்
    ஏஞ்ஜெலினா கிராண்டி@புளோரா (Aபேநடiயே பசயனேகைடடிசய), ஆஸ்டர் அமெலஸ் (Aளவநச யஅநடடரள), ஜெர்பெரா (ழுநசநெசய), பெலர்கோனியம் (Pநடயசபடிnரைஅ), மிராபிலிஸ் ஜலபா (ஆசையbடைளை தயடயிய), வையோலா ஒடரேட்டா (எiடிடய டினடிசயவய) மற்றும் சால்வியா (ளுயடஎயை).
    மலைப்பகுதிகளுக்கேற்ற மெல்லிய தண்டுடைய பல்லாண்டு வாழ் மலர்ச் செடிகள்
    செவ்வந்தி (ஊhசலளயவோநஅரஅ அயஒiஅரஅ), கஜேனியா (ழுயணயnயை), லுபின்ஸ் (டுரிiளே), பிரைமுலா (Pசiஅரடய) மற்றும் கார்னேசன் (னுயைவோரள ஊயசலடிphலடடரள).
    ஓராண்டு வாழ் மற்றும் பல்லாண்டு வாழ் மலர்ச்செடிகளின் சாகுபடிக் குறிப்புகள்
    மண் மற்றும் தட்பவெப்பநிலை
    மண:: நன்கு ஆழமுள்ள, தண்ணீர் தேங்காத, அமிலத்தன்மையற்ற மண் இதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. பொதுவாக ஓராண்டு வாழ் மலர்ச் செடிகளின் வளர்ச்சிக்கு அதிக சூரிய ஒளி அவசியம். சில வகை ஓராண்டு வாழ் மலர்ச் செடிகளுக்கு 50 சதவீத நிழல் அவசியம். (எகா) அஜிரேட்டம் (Aபநசயவரஅ), சுவீட் அலிசம் (ளுறநநவ யடலளளரஅ), கேலண்டுலா (ஊயடநனேரடய), கிளார்கியா (ஊடயசமயை) லார்க்ஸ்பர் (டுயசமளிரச) மற்றும் சால்வியா (ளுயடஎயை).
    மேட்டுப்பாத்தி அமைத்தல் (சூரசளநசல Bநன)
    ஒரு அடி ஆழமுள்ள, நல்ல மண்ணில் 1 முதல் 1.2 மீட்டர் அகலமும், 0.60 மீட்டர் உயரமும் உடைய மேட்டுப் பாத்திகளை அமைத்து, உருளை கொண்டு உருட்டி சம நிலைப்படுத்த வேண்டும். மேட்டுப்பாத்தி அமைப்பதற்கான மண் 1:1 என்ற விகிதத்தில் தோட்ட மண் மற்றும் காய்ந்த இலைச் சருகுகள் கலந்து இருக்க வேண்டும். இத்தகைய மண் கலவையை நன்கு சலித்து, கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம். விதைப்பதற்கு முன்னால் மேட்டுப் பாத்தியை நீரினால் சற்று நனைக்க வேண்டும். பூஞ்சானக் கொல்லி (அல்லது) உயிர்க் காரணிகளால் விதை நேர்த்தி செய்யப்பட்ட மேட்டுப்பாத்திகளில் மலர்ச்செடிகளின் விதைகளை தேவையான அளவு மணலுடன் கலந்து, போடப்பட்ட வரிசைகளில் தூவ வேண்டும். அதன் பின்னால், வரிசைகளை மணலால் மூடி பூ வாளியில் நீர்ப்பாய்ச்ச வேண்டும். மேட்டுப்பாத்திகளை வைக்கோல் (அல்லது) காய்ந்த இலைச் சருகுகளால் மூடி மண் ஈரம் காக்க வேண்டும். நன்க வளர்ந்த 3 முதல் 4 இலைகளையுடைய மலர் நாற்றுக்களை, மேட்டுப் பாத்தியிலிருந்து பிரித்து எடுத்து, நடவுப் பாத்தியில் நட வேண்டும். சில வகை ஓராண்டு வாழ் மலர்ச் செடிகளான, சூரிய காந்தி மற்றும் மார்னிங் குளோரி பெரிய அளவு விதைகளைக் கொண்டிருப்பதால் நேரடியாகவே நடவு மேட்டுப் பாத்தியில் விதைத்து, நன்கு வளர்ந்தவுடன் தேவையான இடைவெளியில் களைத்து விடலாம். மேட்டுப் பாத்திகளைத் தவிர, விதை மண் தொட்டிகளிலும் (நுயசவாநசn ளநநன pயn) (அல்லது) மரத்தினாலான விதைத் தொட்டிகளிலும்; மலர் விதைகளை தூவி நாற்றுக்களை வளர்க்கலாம்.
    மலர்ப்படுக்கையின் முக்கியத்துவம்
    மேட்டுப்பாத்திகளில் தொடர் வரிசையாக ஓராண்டு மற்றும் பல்லாண்டு வாழ் மலர் செடிகளை நட்டு மலர்படுக்கைளாக மாற்றுவதால் தோட்டத்திற்கு மிகவும் அழகு மற்றும் பொலிவு சேர்ப்பதாக அமைகிறது. இந்த மலர்ப்படுக்கைகள் ஒரு அழகு பூந்தோட்டத்திற்கு தேவையான முக்கிய அம்சமாகும். இந்த மலர்ப் படுக்கைகளில் பருவத்திற்கு ஏற்ற மாதிரி, வெவ்வேறு வண்ண மலர்ச் செடிகளை பயிரிட்டு அழகு சேர்க்கலாம். இந்த மலர்ப் படுக்கையானது, ஒழுங்கான முறையில் (சநபரடயச ளாயிந) சமச்சீர் தோட்டங்களில் (குடிசஅயட பயசனநn)அமைக்கப்பட்டிருக்கும். சமச்சீரற்ற தோட்டங்களில் (ஐகேடிசஅயட பயசனநn) வெவ்வேறு வடிவங்களில் (அல்லது) ஒழுங்கற்ற வரிசைகளில் அமைக்கப்பட்டிருக்கும். மலர்ப் படுக்கையின் அகலம் 1.2 மீட்டருக்கு குறையாமல், பூந்தோட்டத்தின் மிக முக்கிய இடங்களில் மற்றும் பார்வையாளர்களின் கண்களில் படும்படி அமைக்கப்பட்டிருக்கும். சற்றே சரிவான நிலங்கள், புல்வெளிகள் ஆகியவற்றில் மலர்ப்படுக்கைகள் அமைக்கப்பட்டு, பருவ காலங்களுக்கேற்றாற் போல் பல வித வண்ண நிறங்களில் ஓராண்டு வாழ் மலர்ச்செடிகள் நடப்பட்டிருக்க வேண்டும்.
    மலர்ப் படுக்கைக்கான வடிவமைப்பு: இந்த மலர்ப் படுக்ககைளை புல்வெளியில் நுழைவுக்கு முன்னால் அமைக்கலாம். இரண்டு மலர்ப் படுக்கைகளுக்கு போதிய இடைவெளி கொடுத்து அமைப்பதால், புல் வெட்டும் கருவி மூலம் புல் தரையை சீராக பராமரிக்கலாம். மலர்ப் படுக்கைகள் ஒழுங்கான வடிவத்திலோ (குடிசஅயட) அல்லது ஒழுங்கற்ற வடிவத்திலோ (ஐகேடிசஅயட)அமைக்கலாம். சிறிய அளவிலான மலர்ப் படுக்கைகளில், ஒரே வகையான அடர் வண்ண நிறத்தில், அதிக பூக்களைக் கொண்டுள்ள மலர்ச் செடிகளை நடவு செய்ய வேண்டும். வெவ்வேறு வண்ணங்கள் (அல்லது) இரு வண்ணங்கள் கலந்து இருக்கின்ற மலர்ப்படுக்கைளில், ஒழுங்கற்ற வடிவம் (ஐகேடிசஅயட) மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய மலர்ப்படுக்கைகளில், அதிக உயரத்தில் வளரும் கோழிக்கொண்டை (hடிடடல hடிஉம), டைத்தோனியா (கூiவாடிnயை) மற்றும் சூரியகாந்தி (ளுரn கடடிறநச) மலர்ச் செடிகளை ஓரத்தில் (ஓர வரிசையில்) நட்டும், நடு வரிசையில் சால்வியா (ளுயடஎயை), பாப்பி (pடிppல) கிளர்கியா (உடயசமயை) மற்றும் டைத்தோனியா (கூiவாடிnயை) ஆகிய மலர்ச்செடிகளை நட்டும், உள் வரிசையில் ஆஸ்டர் (Aளவநச), டையான்தஸ் (னுயைவோரள), கேலண்டுலா மலர்ச்செடிகளை நட்டும், குட்டை மலர்ச்செடிகளான சுவீட் அல்லிசம் (ளுறநநவ யடலளளரஅ), @பேன்சி (Pயளேல) மற்றும் கேண்;டி டப் (உயனேல வரகக) ஆகியவற்றை நட்டும் பல வண்ண மலர்ப் படுக்கைகள் அமைக்கலாம்.
    பிரிக்கிங் (Pசiஉமiபே)
    நன்கு வளர்ந்த, இளவயது மலர்ச் செடிகளின் நாற்றுக்களை, மேட்டுப் பாத்திகளிலிருந்து கூர்மையான மூங்கில் குச்சிகள் (5-7 செமீ நீளம்) மூலம் தோண்டி எடுத்து விதைத் தொட்டிகளில் சிறு குழிகள் எடுத்து நட்டு, சுற்றி நன்கு மண் அனைத்து விடுவதால், மலர்ச் செடிகளின் நாற்றுகள் வீரியமாக, நோய்களின்றி வளருகிறது.
    நாற்று நடவு
    நன்கு வளர்ந்த, நான்கு இலைகளையுடைய, ஒரு மாத வயதான நாற்றுக்களை எடுத்து மலர்ப்படுக்கையில் நட வேண்டும். மேட்டுப் பாத்திகளில் நாற்றுக்களை அகற்றுவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, நீர்ப்பாசனம் கொடுக்காமல், நாற்றுக்களை கடினப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் நாற்றுக்கள் இறக்கும் விகிதத்ததைக் குறைக்கலாம். மலர் நாற்றுக்களை நடுவதற்கு நல்ல குளிர்ச்சியான நேரத்திலோ (அல்லது) மாலை நேரத்திலோ நடுவது நல்லது. நடவு செய்யப்படும் மலர்ப்படுக்கையை 45 செமீ ஆழத்திற்கு உழுது, 4-8 கிலோ மக்கிய தொழுஉரம், 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் (அல்லது) எலும்புத்தூள் ,சதுர அடி இட வேண்டும். நாற்றுக்களிலிருந்து, மலர் மொட்டுக்கள் வந்த பிறகு மேலுரமாக தழைச்சத்து அளிக்க வேண்டும். திரவ உரங்களை அளிப்பதால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
    நீர்ப்பாசனம் மற்றும் சத்துக்கள் மேம்பாடு
    மலர் நாற்றுக்களை நடவு செய்த பின், ஒரு வார காலத்திற்கு மிதமான அளவே நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்பு நன்கு நீர்ப்பாய்ச்சி, களைகளை இரு நாட்கள் சுத்தமாக நீக்க வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்ப்பாசனம் அளிப்பது அவசியம்.
    நடவிற்கான மலர்ப்படுக்கைகளை தயார் செய்யும் போது, தேவையான அளவு அங்கக உரங்கள் மண்ணுடன் கலப்பது நல்லது. மலர்ச் செடிகள் இலை பருவத்திலிருக்கும் போது, 4-5 கிலோ தொழுஉரம், 20 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து 2-3 நாட்கள் வைத்திருந்து, வடிகட்டிய கரைசலை 60 மிலி,சதுர மீட்டர்தெளிக்க வேண்டும்.அதன் பின்பு அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட், பொட்டாசியம் சல்பேட் முதலிய வேதி உரங்களை 2:1:1 என்ற விகிதத்தில், ஒரு சதுர மீட்டருக்கு 60 கிராம் அளவில் இட்டு நன்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
    குச்சி கட்டுதல், நுனி கிள்ளுதல் மற்றும் மொட்டு நீக்குதல்
    மலர்ச் செடிகளில் வலுவிழந்த தண்டுப் பகுதிகளையுடைய செடிகளை, (15-20 செ.மீ உயரம் வளர்ந்த) மூங்கில் குச்சிகளை வைத்து கட்டுவதால் அவற்றின் வளர்ச்சியை நேர்படுத்தலாம். கார்னேசன், செண்டுமல்லி மற்றும் டையான்தஸ் மலர்ச்செடிகள் 20 செமீ உயரம் வளர்ந்தவுடன் நுனி கிள்ளுதல் அவசியம். இதனால், பக்கக்கிளைகள் தோன்றி பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆஸ்டர், காஸ்மோஸ் மற்றும் ஜின்னியா மலர்ச்செடிகளில் 10 செமீ உயரம் வளர்ந்தவுடன், நுனி கிள்ளுதல் அவசியம் அதன் பின்பு, ஒரு தண்டிலுள்ள பக்க மொட்டுக்களின் எண்ணிக்கையை மொட்டு நீக்குதல் மூலம் குறைப்பதால், பெரிய அளவு மலர்கள் செடிகளில் உற்பத்தியாகும்.
    அட்டவணை –ஐமுக்கியமான ஓராண்டு வாழ் மலர்ச் செடிகள்

எண் பொதுப்பெயர் தாவரவியல் பெயர் குடும்பம்

  1. சைனா ஆஸ்டர் கேலிஸ்டெபிஸ் ஸைனென்சிஸ் அஸ்தரேசியே
  2. கோழிக் கொண்டை செலோசியா அர்ஜென்டினாஎயச. கிரிஸ்டேட்டா அமரான்தேசியே
  3. சூரியகாந்தி ஹீலியான்தஸ் ஆனஸ் அஸ்தரேசியே
  4. ஆப்பிரிக்கன் செண்டுமல்லி டஜீடஸ் எரக்டா அஸ்தரேசியே
  5. பிரெஞ்சு செண்டுமல்லி டஜீடஸ் பட்டுலா அஸ்தரேசியே
  6. பால்சம் இம்பேசியன்ஸ் பால்சாமினா பால்சாமினேசியே
  7. வாடாமல்லி கேம்பிரினா குளோபோசா அமரான்தேசியே
  8. காஸ்மோஸ் காஸ்மோஸ் பைபின்னேட்டஸ் அஸ்தரேசியே
  9. கார்னேசன் டையான்தஸ் கேரியோபைலஸ் கேரியோபில்லேசியே
  10. பெட்டுனியா பெட்டுனியா ஹைபிரிடா சோலனேசியே
  11. பிரின்ஸஸ்@பெதர் செலோசியா பிளுமோசா அமரான்தேசியே
  12. கொரியாப்ஸிஸ் கொரியாப்ஸிஸ் டிரம்மோன்டி அஸ்தரேசியே
  13. ஸ்டார் ப்ளவர் பிளாக்ஸ் டிரம்மோன்டி பாலிம்னேசியே
  14. ஜின்னியா ஜின்னியா எலிகன்ஸ் அஸ்தரேசியே

அட்டவணை –ஐஐமுக்கியமான பல்லாண்டு வாழ் மலர்ச் செடிகள்

எண் பொதுப்பெயர் தாவரவியல் பெயர் குடும்பம்

  1. கிரைசோதிமஸ் கிரைசோதிமஸ் புல்செல்லா ஜெஸ்னெரேசியே
  2. ஏஞ்ஜெலோனியா ஏஞ்ஜெலோனியா சாலிகேரிபோலியா ஸ்கார்புலரேசியே
  3. மைக்கேல்மாஸ் டெய்லி ஆஸ்டர் அமலஸ் அஸ்தரேசியே
  4. ஜெர்பெரா ஜெர்பெரா ஜேம்சோனி அஸ்தரேசியே
  5. @ப்ளாங்கெட் பிளவர் கெய்லார்டியா புல்செல்லா அஸ்தரேசியே
  6. பல்லாண்டு வாழ் பால்சம் இம்பேசியன்ஸ் ஹாக்கேரி பால்சாமினேசியே
  7. நாலுமணி செடி மிர்ராபலிஸ் ஜலபா நிக்டாஜினேசியே
  8. பல்லாண்டு வாழ் வெர்பீனா வெர்பீனா எர்ரினாய்டஸ் வெர்பினேசியே
  9. கோல்டன் ராடு சாலிடாகோ கெனாடியென்சிஸ் அஸ்தரேசியே
  10. பல்லாண்டு வாழ் ஜின்னியா ஜின்னியா லினாரிஸ் அஸ்தரேசியே
  11. ஸ்பேத்தி பைலம் ஸ்பேத்திபைலம் வேலிஸி ஏரேசியே
  12. எபிசியா ஏபிசியா குப்பரேட்டா ஜெஸ்னெரேசியே
  13. ஆப்பிரிக்கன் வைலட் செயிண்ட் பாலியா இயோனன்தா போர்டுலகேசியே
  14. 10 மணி செடி போர்ட்லக்கா கிரான்டி@புளோரா போர்டுலகேசியே

தகவல் : ப.அருள் அரசு, மு.பழனிக்குமார் மற்றும் சு.குமார், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைக் கல்ல}ரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.

Spread the love