திருவண்ணாமலை, ஏப்.1
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழவச்சனூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “ஒருங்கிணைந்த களை மேலாண்மையில் நவீன உத்திகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி 29.03.2022 அன்று நடத்தப்பட்டது. இப்பயிற்சியை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்;சி நிலையத்தின் முதல்வர் முனைவர் நா. முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்து இப்பயிற்சியை பற்றியும், களைகளினால் மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மற்றும் கல்லூரியில் செயல்படும் திட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார். முனைவர் தி.ரங்கராஜ் பேராசிரியர் (உழவியல்) வரவேற்புரை ஆற்றி மற்றும் ஒருங்கிணைந்த களை மேலாண்மை தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். முனைவர் மு.பாபு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் மேலாண்மை இப்பயிற்சியை பற்றி வாழ்த்துரை கூறினார். முனைவர் ப.துக்கையண்ணன், உதவி பேராசிரியர் (உழவியல்), வேதியியல் மற்றும் இயந்திரவியல் முறைகளில் களைகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களை பற்றி விளக்கமாக கூறினார்.