May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஒருங்கிணைந்த பண்ணை முறை
விளக்கமளித்த வேளாண் மாணவிகள்

கோவை, மார்ச் 15

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மாணவிகள் பா.சாருமதி, ஜெ.துர்காதேவி, ப.கீதாலட்சுமி, ஜோதியாகன்டி, கு.கீர்த்தனாபிரியா, ரா.மின்னுஷா, ரா.முத்துச்செல்வி, செ.நந்தினி, மா.பிரியதர்ஷினி, அ.சிநேகா மற்றும் ஷ.ஸ்ரீநிதி அன்னூர் வட்டாரம், கோவில்பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணை முறை பற்றி கிராம மக்களுக்கு விளக்கினர். ஒருங்கிணைந்த பண்ணை முறை என்றால் வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள் மற்றும் மீன் ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைத்து பராமரித்து ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பினையும் கூடுதல் வருவாயினையும் பெற முடியும். இதன் பயன்களையும் மற்றும் அமைப்பையும் வரைபடம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கினர்.

Spread the love